இந்த மருந்துகளை ஏற்கனவே எடுத்துக் கொண்டவர்கள், தாங்கள் வயதான காலத்திலும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், இளமையாக இருப்பது போல் உணர்வதாகவும் கூறியிருந்தனர். இதனால் ஜான்சனும் இந்த மருந்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த மருந்து எலிகளுக்கு சோதனை செய்யப்பட்டபோது 14% ஆயுள் அதிகரித்தது என்றும், மனிதர்களுக்கு நடைபெற்ற சோதனைகளிலும் வெற்றி கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. இதையறிந்து அவர் அந்த மருந்தை எடுத்துக் கொண்டார்.
“ரபமைசின்” என்ற பெயரைக் கொண்ட இந்த மருந்தை எடுத்துக்கொண்ட சில ஆண்டுகளில், அவருக்கு பக்கவிளைவுகள் ஏற்படத் தொடங்கின. வாயில் புண்கள் மற்றும் காயங்கள் குணமாகாமல் இருந்தன. கொழுப்பு அளவு மற்றும் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தன. இதயத்துடிப்பு வேகமாக இருந்ததையும் அவர் கவனித்தார். இதனால் அவர் அச்சமடைந்தார்.
பின்னர் உடலை பரிசோதனை செய்தபோது, அவர் ரபமைசின் மருந்தை அதிகமாக எடுத்துக் கொண்டால்தான் இவ்விளைவுகள் ஏற்பட்டதை அறிந்தார். தற்போது அவர் அந்த மருந்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
என்றும் இளமையாக வாழ வேண்டும் என்ற நோக்கில் எடுத்துக்கொண்ட மருந்து, அவரை சீக்கிரமாக முதுமை தோற்றத்திற்கு கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்து நம்பிக்கைக்கு உரியது அல்ல என்றும், இதற்கு மேலும் பல ஆய்வுகள் செய்ய வேண்டிய நிலை தற்போது உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.