அரசியலே வேண்டாம்.. வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா அண்ணாமலை? புதிய பாஜக தலைவர் யார்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் இதனை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக…

1851206 annamalai1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் இதனை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் அவரது வருகைக்கு பின்னர் தான் தமிழக பாஜக புத்துணர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டாவுக்கு கீழ் வாக்கு சதவீதம் வைத்திருந்த பாஜக தற்போது இரட்டை இலக்கத்தில் வாக்குச் சதவீதம் பெற்றுள்ளது என்றால் அதற்கு அண்ணாமலையின் கடினமான உழைப்புதான் காரணம் என்றும் குறிப்பாக என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கு எதிராக அதிமுக என்ற ஒரே கட்சி மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக இருந்த நிலையில் தற்போது திமுகவா? பாஜகவா என்ற நிலை ஏற்பட்டுள்ளதற்கு அண்ணாமலை தான் முழு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2026 ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தான் இருப்பார் என்றும் கண்டிப்பாக பாஜகவை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக எந்த தேர்தலும் இல்லை என்பதால் அண்ணாமலை மேல் படிப்பு படிக்க லண்டன் செல்ல இருப்பதாகவும் நான்கு மாதங்கள் அவர் அங்கு இருந்து தனது உயர் படிப்பை கவனிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழக பாஜகவிற்கு தற்காலிக தலைவரை நியமனம் செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை மேல் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்புவாரா? அல்லது வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.