ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பதக்கம் தரம் குறைவாக இருப்பதாகவும் இதெல்லாம் ஒரு பதக்கமா என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்பட பல நாடுகள் இதில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளிக் கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்போர்டர் விளையாட்டு வீரர் வெண்கல பதக்கம் வாங்கிய நிலையில் அந்த பதக்கத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இவ்வளவு மோசமான தரம் குறைந்த ஒலிம்பிக் பதக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை என்றும் ஒலிம்பிக் நிர்வாகிகள் பதக்கம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இந்த பதக்கத்தை கடந்த இரண்டு நாட்களாக பார்த்து என் மனம் மிகவும் கடினமாக இருக்கிறது என்று இந்த வெற்றி எனக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கு கமெண்ட் அளித்துள்ள ஒரு நெட்டிசன் ’வினிகர், உப்பு மற்றும் ஒரு துணியால் பதக்கத்தை சுத்தம் செய்யுங்கள், அதன் பிறகு எங்களுக்கு காட்டுங்கள், உங்கள் பதக்கம் வெண்கலத்தால் ஆனது, காற்று வியர்வை வாசனை திரவியம் உள்ளிட்டவை காரணமாக அதன் கலர் மாறியிருக்கும். ஏனெனில் காப்பர் ஆக்ஸிஜன் ஏற்றம் கொண்டது, அதை எளிதில் சுத்தப்படுத்தலாம், சுத்தப்படுத்தினால் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் கமிட்டி இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த போது ’இந்த குற்றச்சாட்டை நாங்கள் கவனத்துடன் ஆய்வு செய்வோம் என்றும், கண்டிப்பாக இது குறித்து நடவடிக்கை எடுப்போம் என்றும், இனி வரும் காலங்களில் பதக்கங்கள் தரம் குறைந்தவையாக இல்லாமல் இருக்கும்’ என்றும் கூறியுள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
