அமெரிக்கா தற்போது Debt Spiral என்ற கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீண்டு வர ஒரே வழி, டொனால்ட் டிரம்ப் தனது வர்த்தக கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான். இல்லையெனில், பொருளாதாரம் ஒரு ‘பபுள்’ போல வெடித்து, அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு அமெரிக்கர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அவர் வால்மார்ட் ஸ்டோரில் இந்தியாவுக்கு வரி விதிப்பதற்கு முன் இருந்த பொருட்களின் விலைக்கும், வரி விதித்த பின் உள்ள விலைக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு காட்டினார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அமெரிக்க மக்களின் பொதுவான மனநிலை இதுதான் என தெரியவந்துள்ளது. பல இடங்களில் இதேபோன்ற விலை மாற்றங்கள் நிகழ்வதாகவும், சில நாட்களுக்கு முன் இருந்த விலையை விட தற்போது பொருட்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்தியாவை வர்த்தகத்தில் பகைத்துக்கொண்டது ஒரு தவறான முடிவு என்றும், அதன் விளைவாகவே தற்போது அமெரிக்க மக்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர். டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் ஒரு “மோசமான முடிவு” என்றும், “நட்பு நாடான இந்தியாவை பகைத்து கொண்டு, எதிரி நாடான சீனாவுக்கு சலுகை காட்டுவது” அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.
தற்போது, அமெரிக்க மக்களே நேரடியாக புலம்ப ஆரம்பித்துள்ளனர். இந்த மக்களின் அதிருப்தி விரைவில் ஒரு புரட்சியாக வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் சிக்கும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடி, அமெரிக்காவின் உள்நாட்டு கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் இரண்டிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
