கொழுந்துவிட்டு எரிகிறது அமெரிக்காவின் எண்ணெய் ஆலை.. தினசரி 4,35,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு.. உட்கார்ந்த இடத்தில் இருந்து எங்களால் லண்டன், பாரீஸ், நியூயார்க்கை அடிக்க முடியும் என்று சொன்ன ஈரான் கைவரிசையா? அல்லது தற்செயல் விபத்தா? தூங்குற ஸ்லீப்பர் செல்லை தட்டி எழுப்பாதீங்கன்னு சொன்னது சும்மா இல்ல… அவங்க முழிச்சா என்னவேனும்னாலும் நடக்கும்.. வெடிச்சது ஹீட்டரா இல்ல ஈரானோட பிளானான்னு தெரியல… ஆனா கிளம்புன அந்த கரும்புகை, அமெரிக்காவோட வல்லரசு பிம்பத்தை மறைச்சுடுச்சு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தை தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் தீப்பிழம்புகள்…

oil fire

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தை தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் தீப்பிழம்புகள் சூழ்ந்ததோடு, அப்பகுதி வானம் முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த விபத்தின் போது ஏற்பட்ட அதிரடியான வெடிச்சத்தம் பல மைல் தூரத்திற்கு எதிரொலித்ததாகவும், அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்த வீடுகள் அதிர்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் அவசரகால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஜெபர்சன் கவுண்டி ஷெரிப் ஜேனா ஸ்டீபன்ஸ் இந்த விபத்து குறித்து கூறுகையில், தொழிற்சாலையில் இருந்த ஒரு தொழில்துறை ஹீட்டர் வெடித்ததே இந்த தீ விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தினசரி 4,35,000 பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளாக மாற்றும் திறன் கொண்ட இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும், அங்கு பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போர்ட் ஆர்தர் நகரத்தின் மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மக்கள் தங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறும், வெளியே பரவி வரும் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தடையின்றி செல்வதற்காக அந்தப் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் 82 மற்றும் 87 ஆகியவற்றை ஜெபர்சன் கவுண்டி அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர்.

இந்த விபத்தானது உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்கனவே நெருக்கடி நிலவி வரும் சூழலில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் வேளையில், இந்த சுத்திகரிப்பு நிலைய விபத்து கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டுடனான போர்ச்சூழல் காரணமாக ஏற்கனவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 33 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கேலன் பெட்ரோல் சராசரியாக 3.91 டாலர் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விபத்துக்கும் ஈரானுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஈரானில் உள்ள ஸ்லீப்பர்செல்கள் தான் இந்த விபத்துக்கு காரணம் என ஆதாரமில்லாமல் வதந்தி பரப்பப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உட்கார்ந்த இடத்தில் இருந்து எங்களால் லண்டன், பாரீஸ், நியூயார், வாஷிங்டனை அடிக்க முடியும் என ஈரான் கூறியதற்கும், இந்த விபத்துக்கும் சிலர் முடிச்சு போட்டு வருகின்றனர்.