தங்கத்தின் விலை உயர்வதற்கான பல்வேறு காரணங்கள் உள்ள நிலையில், புவிசார் அரசியல் பதட்டங்கள், வட்டிக்குறைப்பு பற்றிய கணிப்புகள், டாலர் மதிப்பு மற்றும் சர்வதேச பொருளாதார நிலை ஆகியவை சில முக்கிய காரணங்கள் ஆகும். குறிப்பாக, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்பது தங்கத்தின் விலைக்கு ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணமாகும்.
நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருக்கும் தேர்தல் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய முடிவுகள் அடுத்த வாரத்தில் தங்க விலையை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும். தங்கம் விலை உயரக் கூடும் என்றும், அமெரிக்க தேர்தல் முடிவும் தங்கத்தின் விலை போக்கை தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை அதிக ஏற்றத்திலோ அல்லது இறக்கத்திலோ இருக்கலாம்.
எனவே அடுத்த வாரம் தங்கம் விலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தங்கத்தில் முதலீடு செய்வது கவனத்துடன் செய்யப்பட வேண்டும் என்றும் தற்போது தங்கம் விலை சவாலான காலகட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.