அமெரிக்கா ஒரு வல்லரசாகவும் பணக்கார நாடாகவும் இருந்தாலும், அந்நாட்டின் மிகப்பெரிய ஆபத்து அதன் சொந்த ஆணவம் தான். தடைகள், வர்த்தக வரிகள் போன்ற தொடர்ச்சியான தவறான முடிவுகள், மற்ற நாடுகள் மாற்று வழிகளை தேட வழிவகுத்துள்ளன. அமெரிக்கா தனது வல்லரசு பட்டத்தை இழந்த ரோமானிய மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளின் சரிவுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த பேரரசுகள் வெளி தாக்குதலால் வீழவில்லை, மாறாக தங்களின் ஆணவம் மற்றும் காலத்திற்கு ஏற்ப தங்கள் கொள்கைகளை மாற்றி கொள்ள தவறியதால்தான் வீழ்ந்தன என்பது வரலாறு. அதேபோல் அமெரிக்காவும் தனது ஆணவத்தால் அழியப்போகிறது என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் தவறுகளால் அதிகம் பயனடைவது இந்தியா என்பதும் ஒரு ஆச்சரியமான தகவல். இந்தியா தனது சொந்த அமைப்புகள், தொழில்நுட்ப திறமை மற்றும் நட்பு நாடுகளின் கூட்டணிகளை வலுவாக கட்டியெழுப்பி வருகிறது. அமெரிக்காவை போலல்லாமல், இந்தியா எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்தி, உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்படுகிறது. அமெரிக்காவின் சராசரி வயது 39 ஆக இருக்கும்போது, இந்தியாவின் சராசரி வயது 28 ஆக இருப்பது, இந்தியாவின் எதிர்கால ஆற்றலுக்கு ஒரு முக்கிய காரணியாகக் காட்டப்படுகிறது.
அமெரிக்கா தனது போக்கினை மாற்றிக்கொள்ளாவிட்டால், அதன் உலகத் தலைமை நிலையை இழக்க நேரிடும் என்றும், ஒரு கட்டத்தில் தன்னால் கட்டுப்படுத்தவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாத இந்தியாவை சார்ந்திருக்க நேரிடும் என்றும் அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாற்றம் ஒரே இரவில் நிகழாது என்றாலும், மெதுவாக நிகழும் ஒரு விடியல் போன்றது என்றும் இந்த காணொளி கூறுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
