அமெரிக்காவிலிருந்து இந்தியா உள்பட பல்வேறு நகரங்களுக்கு கேபிள் இணைப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடலுக்கு அடியில் இணைக்கப்படும் இந்த கேபிள் காரணமாக இனி பேஸ்புக் சர்வருக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் எப்போதும் பிசியாக இருப்பதால், அதன் சர்வர்கள் பிசியாக இயங்கி வருகின்றன. இதனால் அமெரிக்காவிலிருந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கடலுக்கு அடியில் கேபிள்கள் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 10 மில்லியன் டாலர் பட்ஜெட் போடப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு, கடல் வழியாக சென்னை, மும்பை உள்பட முக்கிய நகரங்களுக்கு கேபிள்கள் இணைக்கப்படும் என்றும், அதன் பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கு கேபிள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் கேபிள் இணைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டால், மெட்டா தனக்கென தனி சர்வர் வைத்துள்ளதால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் வேகம் அதிகரிக்கும் என்றும், எந்தவித இடைஞ்சல்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை அடுத்து, மேற்கண்ட மூன்று தளங்களும் தனி சர்வரில் செயல்படும் என்பதால், வேற லெவலில் அதன் அனுபவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.