தீபாவளி வந்தாலே கொண்டாட்டம் குதூகலம் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பண்டிகையை இந்தியாவில் விரும்பி கொண்டாடுவர். புத்தாடைகள், புது பொருட்கள் என வீடுகளில் அலங்கரிக்கப்படும். இந்த தீபாவளியை முன்னிட்டு தான் flipkart மற்றும் amazon போன்ற பெரிய இ காமர்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை வருடா வருடம் செய்து வருகிறது. ப்ளிப்கார்டு பிட் பில்லியன் டேஸ் சேலை இந்த மாத இறுதியில் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இனி Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் என்னென்ன தள்ளுபடிகள் எப்போது தொடங்குகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
அமேசானின் வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிகவும் விரும்பக்கூடிய கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விரைவில் வரவிருப்பதாக Amazon நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முறை மிகக் குறைந்த விலையில் அதிக சலுகைகளுடன் பொருட்கள் இருப்பதாக கூறி இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ், கேஜெட்டுகள், ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள் என அனைத்தையும் அள்ளி குவிக்கலாம்.
அமேசான் ப்ரைம் மெம்பர் சிப் வைத்திருப்பவர்களுக்கு பிரத்தியேகமான சலுகைகள் கிடைக்கும். இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எப்போது தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வையை அறிவிப்பை விரைவில் Amazon நிறுவனம் வெளியிடப் போவதாக கூறி இருக்கிறது.
வீட்டு உபயோக பொருட்களில் 75 சதவீதம் தள்ளுபடியும், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடை அணிகலன்கள், காலணிகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையல் அறை பொருட்கள், புத்தகங்கள் அவற்றிற்கு 75% சலுகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எஸ்பிஐ டெபிட் கிரெடிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடியும் ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ், கோடக், அமேசான், ஐசிஐசிஐ, கிரெடிட் கார்டு பிரைம் மெம்பர்ஷிப் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% கிடைக்கும். Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் எக்ஸ்சேஞ்ச் ஆபர்களும் இருக்கிறது மற்றும் EMI இல் பொருட்களை வாங்கும் வசதியும் இருக்கிறது. இந்த தீபாவளிக்கு இந்த வருடம் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இருங்கள் என்று Amazon நிறுவனம் அறிவித்திருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவர் செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது.