உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தற்போது புதிய மாடல் டேப்லட் ஒன்றை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த மாடல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்
அமேசான் ஃபயர் மேக்ஸ் 11 என்ற அமேசானின் புதிய டேப்லெட் மே 24 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது 11-இன்ச் டிஸ்ப்ளே, 4ஜிபி வரை ரேம் மற்றும் ஆக்டா-கோர் மீடியாடெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட் இரண்டு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. அதாவது 64ஜிபி மற்றும் 128ஜிபி. இதன் விலை 64ஜிபி வகைக்கு $229 மற்றும் 128ஜிபி வகைக்கு $279 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் ஃபயர் மேக்ஸ் 11 மாடல் டேப்லட் ஆண்ட்ராய்டின் ஃபயர் ஓஎஸ் 9 இல் இயங்குகிறது. பொழுதுபோக்கு, உற்பத்தித்திறன் மற்றும் கேமிங்கிற்கு ஏற்றதாக இந்த டேப்லட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டேப்லட் குறித்த முழு விபரங்கள் இதோ:
* 2000 x 1200 பிக்சல் ரெசலூசன் கொண்ட 11 இன்ச் டிஸ்ப்ளே
* வேகமான செயல்திறனுக்கான octa-core MediaTek பிராஸசர்
* 4ஜிபி வரை ரேம்
* 14 மணிநேர பேட்டரி ஆயுள்
* வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கு வசதியான கேமிரா
* புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கான பின்புற கேமரா
* பிற சாதனங்கள் மற்றும் துணைக்கருவிகளுடன் இணைப்பதற்கான Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.3 வசதி உண்டு
* 259.1 x 163.7 x 7.5 மிமீ அளவுகளை கொண்டது
* எடை: 490 கிராம்
* சுற்றுப்புற ஒளி சென்சார், கைரேகை சென்சார் வசதிகள்
மலிவு விலையில் சிறப்பு அம்சங்களை கொண்ட டேப்லெட்டைத் தேடும் அனைவருக்கும் அமேசான் ஃபயர் மேக்ஸ் 11 ஒரு சிறந்த தேர்வாகும். மேலும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், கேம்கள் விளையாடுவதற்கும், இணையத்தில் பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் இது ஒரு சரியான தேர்வு. அமேசான் ஃபயர் மேக்ஸ் 11 இப்போது Amazon.com இணையதளத்தில் கிடைக்கும்.