அஜீத்துக்குக் குவியும் வாழ்த்து.. ஜெயிச்சிட்டோம் மாறா..! ரியல் பொங்கல் விருந்து இதான்…

துபாயில் நடைபெற்று வந்த துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜீத் ரேஸிங் அணி 3-வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. தேசியக் கொடியைக் கையில் ஏந்தி வெற்றிக் களிப்புடன்…

Ajith Racing

துபாயில் நடைபெற்று வந்த துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜீத் ரேஸிங் அணி 3-வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. தேசியக் கொடியைக் கையில் ஏந்தி வெற்றிக் களிப்புடன் அஜீத் துள்ளலாக நடந்து வரும் வீடியோ இணையத்தையே கதற விடுகிறது.

நடிகர் அஜீத் கடந்த சில மாதங்களாக தனியாக அஜீத் ரேஸிங் என தனியாக ரேஸிங் நிறுவனத்தினை ஆரம்பித்து அதன் மூலம் தான் உள்பட தனது அணி வீரர்களையும் கார் பந்தயத்தில் பங்கெடுத்து வருகிறார். ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயம், கார் பந்தயம் உள்ளிட்டவற்றில் பங்கு பெற்று அசத்திய அஜீத் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

அந்த வகையில் ரேஸிங் நிறுவனம் ஆரம்பித்த பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே மூன்றாம் இடம் பிடித்து நாட்டிற்குப் பெருமை தேடித் தந்திருக்கின்றனர் அஜீத் அணியினர். 24H கார் ரேஸ் என்பது 24 மணிநேரம் இடைவிடாது ரேஸிங்கில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு அணியிலும் 3 அல்லது 4 பேர் இருப்பர். ஒவ்வொருவருக்கும் 6 மணிநேரம் ஒதுக்கப்படும். இதில் முதலிடம் பெறுபவரே வெற்றியாளர் ஆவார்.

போனதெல்லாம் போகட்டுட்டும் தேவையில்லை Tears… துபாய் கார் ரேஸிலிருந்து விலகிய அஜீத்..

இந்நிலையில் அஜீத் அணியில் பங்கெடுத்த வீரர்கள் மொத்தம் 568 லேப்கள் ஓட்டிய நிலையில் 26 முறை அவர்களின் கார் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது போட்டிகள் முடிந்த நிலையில் அஜீத்குமார் அணி 3-ம் இடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் ரேஸ் கார் ஓட்டுவதைக் காண்பதற்காக ரசிகர்கள் பலர் துபாய்க்குப் படையெடுத்தனர். எனினும் அவர் Razoon அணிக்காக கார் ஓட்டினார். இந்நிலையில் நேற்று துபாய் போட்டிகளில் ரேஸில் கார் ஓட்டப் போவதில்லை என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் மற்ற வீரர்கள் தொடர்ந்து பங்கெடுத்து வந்த நிலையில் தற்போது சாதனை புரிந்திருக்கிறது.

நடிகர் அஜீத்துக்கும், அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நடிகர் மாதவன் உடன் இருந்து அஜீத்தின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

திரையில் கடந்த 2 வருடங்களாக அஜீத்தைக் காணாவிட்டாலும், ரேஸில் பங்கெடுத்து வெற்றி வாகை சூடி இந்தப் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கிறார் அஜீத். வெற்றி பெற்றதும் தேசியக் கொடியைக் கையில் ஏந்தி உற்சாக மிகுதியில் ஓடிவரும் காட்சி காண்போரைப் புல்லரிக்க வைக்கிறது.