பைபிள் வசனத்துடன் மதுரையில் அஜீத்துக்கு வாழ்த்து..வைரலாகும் போஸ்டர்..

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக எந்த ஒரு நிகழ்வானாலும் அடுத்த நிமிடமே மதுரையின் கவனத்தில் வரும். தென்தமிழகத்தின் அனைத்திற்கும் மத்திய நகராமாக மதுரை இருப்பதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. சினிமா, அரசியல் என இரண்டிலும்…

Ajith Poster

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக எந்த ஒரு நிகழ்வானாலும் அடுத்த நிமிடமே மதுரையின் கவனத்தில் வரும். தென்தமிழகத்தின் அனைத்திற்கும் மத்திய நகராமாக மதுரை இருப்பதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. சினிமா, அரசியல் என இரண்டிலும் புது செய்திகள் வந்தால் அடுத்த கணமே மதுரையில் போஸ்டர் தயாராகி விடும். மேலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் பிளக்ஸ் கலாச்சாரமும் அதிகம் காணப்படுகிறது.

அந்த வகையில் துபாய் 24H கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜீத் அணியினர் மூன்றாம் இடம் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த நிலையில் அணியின் உரிமையாளரான அஜீத்துக்கு வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஜீத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

சில இடங்களில் அஜீத் கட்அவுட்டை உடனுக்குடன் வைத்து சூடம் சுற்றிப் போட்டனர். விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப் போன நிலையில் இந்தப் பொங்கலுக்கு அஜீத்தின் இந்த வெற்றி ரசிகர்களை பெரும் வைப் ஆக்கியுள்ளது.

காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் : முதல்வர் அறிவிப்பு..

போக்குவரத்துக் காவல் துறையினரும் அஜீத்தின் வெற்றியை விழிப்புணர்வு பிரச்சாரமாக எடுத்து ரோட்டில் ரேஸ் ஓட்டாமல், களத்தில் நின்று சாதித்துக் காட்டுங்கள் அஜீத்தைப் போல என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இப்படி பல்வேறு வகையிலும் அஜீத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில் மதுரை ரசிகர்கள் சும்மாவே போஸ்டர்களில் அதகளப்படுத்துவார்கள். தற்போது இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பைபிள் வசனத்தினைக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

பைபிளில் வரும் வசனமான “உன் நம்பிக்கை வீண்போகாது.” நீதிமொழிகள் 23:18. என்று குறிப்பிட்டுள்ளனர். திரையுலகிலும், பந்தயத்திலும் அஜீத் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்தவர். எனினும் தனது விடாமுயற்சியால் மீண்டும் மீண்டும் எழுந்து வருபவர்.

எனவே அஜீத்தை நடிகர் என்பதைக் காட்டிலும், ஒரு தலைசிறந்த தன்னம்பிக்கை மனிதராக விளங்குவதால் அவரை இன்ஸ்பிரேஷனாகவே கோடிக்கணக்கான ரசிகர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தூங்கா நகரம் அஜீத் ஃபேன்ஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.