எடப்பாடியை என்னன்னு நினைச்சிங்க.. அமித்ஷாவுக்கு எடப்பாடி போட்ட கண்டிஷன்? வருகிறதா உண்மையான டேட்டா? மக்களுக்கு இனிமேல் பரபரப்பான செய்திகள் தான்..

அ.தி.மு.க. கூட்டணி பொருந்தாத கூட்டணி என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை கட்டாயப்படுத்துகிறார் என்றும், அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் முக்கிய அமைச்சரவை பதவிகளை அமித்ஷா பறித்துக் கொள்வார் என்றும்,…

amitshah eps

அ.தி.மு.க. கூட்டணி பொருந்தாத கூட்டணி என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை கட்டாயப்படுத்துகிறார் என்றும், அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் முக்கிய அமைச்சரவை பதவிகளை அமித்ஷா பறித்துக் கொள்வார் என்றும், எடப்பாடியாரை டம்மி ஆக்கிவிடுவார்’ என்றும், நாளடைவில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்துக்கு பா.ஜ.க. வந்துவிடும் என்றும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும், பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் தி.மு.க.வின் அபிமானிகளும் சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், எடப்பாடியார் யார் என்பது இன்னும் பலருக்குத் தெரியவில்லை. ஜெயலலிதாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலாவையே அவர் வெளியே துரத்தியவர்; முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியவர்; தன்னுடைய முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் தன்னை முதலமைச்சர் ஆக்கிய டி.டி.வி. தினகரனையே கட்சியில் இருந்து வெளியேற்றியவர். எனவே, அவருக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், தன்னுடைய பதவியையும் கட்சியையும் காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அமித்ஷாவுக்கு எடப்பாடி கட்டுப்பட்டுப் போவதுபோல் தெரிந்தாலும், உண்மையில் எடப்பாடி போட்ட அனைத்து நிபந்தனைகளையும் அமித்ஷா ஏற்றுக்கொண்டார் என்றும், அவர் இதுவரை யாருக்குமே இறங்கி வராத நிலையில், எடப்பாடியாருக்கு மட்டும் இறங்கி வந்திருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன.

குறிப்பாக, அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட நிபந்தனைகளில் ஒன்று, “தி.மு.க.வுடன் கள்ள கூட்டணி வைக்கக்கூடாது” என்பதுதான். தி.மு.க.வின் ஊழல்களை வெளிப்படுத்தும் அனைத்து டேட்டா’க்களையும் வெளியே சொல்ல வேண்டும் என்றும், குறிப்பாக மத்திய அரசு இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு எந்தெந்த துறைகளில் எவ்வளவு நிதி கொடுத்தது என்பதை ஆதாரத்துடன் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், அந்த ஆதாரத்தை நாம் பிரச்சாரமாக மேற்கொண்டால் “இவ்வளவு பணம் வாங்கிய தி.மு.க., மத்திய அரசு நிதியே தரவில்லை என்று பொய் சொல்கிறது” என்பதை நிரூபிக்கலாம் என்றும், அதுமட்டுமின்றி மத்திய அரசிடமிருந்து வாங்கி அந்த பணத்தையெல்லாம் தி.மு.க. என்ன செய்தது என்று மக்கள் மத்தியில் கேள்வியாக எழுப்பலாம் என்றும் அமித்ஷாவிடம் கூறி இருப்பதாக தெரிகிறது. அமித்ஷாவும் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும், இன்னும் சில நாட்களில் டேட்டாக்கள் அனைத்தும் வெளியே வரும் என்றும், அப்போது பரபரப்பான செய்திகள் மக்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தி.மு.க.வின் ஊழல்களை வெளிப்படுத்த அண்ணாமலை சில ஆண்டுகளுக்கு முன் முயற்சி செய்தார், ஆனால் அது சில சக்திகளால் தடுக்கப்பட்டது என்றும், அதன் பின்னர்தான் அவர் பின்வாங்கியதாக கூறப்படும் நிலையில், தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்தால் அது தங்களுக்கு, தங்கள் கூட்டணிக்கு பாசிட்டிவ் ஆக இருக்காது என்பதை பா.ஜ.க.வும் தற்போது புரிந்துகொண்டதாகவும், அதனால் தி.மு.க.வுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அத்தனையும் செய்ய பா.ஜ.க. தயாராகிவிட்டது என்றும் கூறப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில், அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி செய்யும் பிரச்சார மேடைகளில் தி.மு.க. செய்த ஊழல் ஆதாரத்துடன் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துமா?, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு ஒரு பாசிட்டிவாக மாறுமா?, தி.மு.க.விற்குப் பின்னடைவை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.