1ஆம் வகுப்பு முதல் AI பாடங்கள்.. சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இதுதான் காரணமா?

  நம்ம ஊரில் கூடுதலாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என்று கூறினால் கூட, குழந்தைகளுக்கு அதிக சுமை ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், சீனாவில் ஒன்றாம் வகுப்பு முதலே ஏ.ஐ. (Artificial…

ai technology

 

நம்ம ஊரில் கூடுதலாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என்று கூறினால் கூட, குழந்தைகளுக்கு அதிக சுமை ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், சீனாவில் ஒன்றாம் வகுப்பு முதலே ஏ.ஐ. (Artificial Intelligence) தொடர்பான அடிப்படை பாடங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைநகர் பீஜிங்கில் உள்ள பள்ளிகளில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடங்களை அறிமுகப்படுத்த நாட்டின் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுதோறும் குறைந்தது 8 மணி நேர செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இணையதள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளை தனித்தனியாக பாடமாகவும் நடத்தலாம் அல்லது தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பாடங்களில் சேர்த்தும் ஒருங்கிணைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் ஏ.ஐ தொழில்நுட்பமே மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்பதைக் கருத்தில் கொண்டு, சீனாவில் உள்ள இளைய தலைமுறை இதனைப் பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிலை முதலே ஏ.ஐ. பாடங்கள் தொடங்கப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே எதிர்கால புரட்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்று சீனாவின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் அறிமுகமானால், அதை குழந்தைகள் முதல் சொல்லிக்கொடுக்கும் கல்வி முறையை சீனா கடைப்பிடிப்பதால் தான், அந்த நாடு தொழில்நுட்ப முன்னோடியாக விளங்குகிறது.