உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் AI டெக்னாலஜி கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக சட்டத்துறையிலும் நுழைந்து விட்டது. ஒரு வழக்கை வழி நடத்துவதற்கு வழக்கறிஞர் விடிய விடிய உட்கார்ந்து சட்ட நுணுக்க பாய்ண்டுகளை தேடி எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை, அனைத்தையும் ஒரு நொடியில் எந்த வழக்கிற்கு எந்த பாயிண்ட்டுகள் தேவை என்பதை அதுவே எடுத்துக் கொடுத்து விடும் வகையில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலை குறித்து தற்போது பார்ப்போம்.
Coingeit Technologies Private Limited நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட CaseDocker என்பது செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஸ்மார்ட் லீகல் வொர்க்டெஸ்க் ஆகும். இது சட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் லீகல் டீம்கள் மற்றும் தனிப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்ற யாஷ் சிங்கால் என்பவர் இந்த CaseDocker-ஐ உருவாக்கியுள்ளார். தற்போது வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் சில சட்ட செயலிகளை அணுகி தகவல்களை பல்வேறு இடங்களில் பெற்று, அதை கூகுள் டிரைவ், அவுட்லுக் போன்றவற்றில் சேமிக்கின்றனர், பின்னர் கோப்புகளை ஒருவருக்கொருவர் அனுப்புகின்றனர்,.
பொருளாதார மற்றும் தொழில்துறை துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் தங்களுடைய சட்ட ஆவணங்களையும் ஒப்பந்தங்களையும் இன்னும் காகித வடிவத்தில் வைத்திருக்கின்றனர். அவற்றை டிஜிடல் வடிவத்தில் மாற்றுவதில் அவர்கள் இன்னும் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையை மாற்றவே, யாஷ் சிங்கால் AI ஆதாரமாக செயல்படும் ஸ்மார்ட் வொர்க்டெஸ்க் உருவாக்க முடிவெடுத்தார். வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் தங்களுடைய கிளையன்ட், வழக்கு, பில்லிங் மற்றும் பிற பணிகளை ஒரே இடத்தில், எளிதாக நிர்வகிக்க முடியுமென அவருடைய நோக்கம்.
இதன் முக்கிய அம்சங்கள்
1. வழக்குகள் மற்றும் அவைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க ஒருங்கிணைந்த மேலாண்மை.
2. ஒப்பந்தங்களை உருவாக்குதல் முதல் வழக்கு முடிவடையும் வரை நிர்வகிக்க AI கருவிகள்.
3. விதிமுறைகளையும் நேரங்களை தவறாமல் தானாகவே கண்காணிக்கும் வசதி.
4. ஷெட்யூல், நினைவூட்டல், கிளையன்ட் தொடர்புகள் குறித்த தகவல்களை சேமித்து வைத்தல்.
5. ரியல் டைம் ஆவண பகிர்வு மற்றும் குழு மெசேஜிங் வசதி.
6. பாதுகாப்பான ஃபைல் அப்லோட், OCR, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு வசதியுடன்.
7. வழக்குகளுக்கான லைவ் அப்டேட்கள்.
8. முக்கியமான வழக்கின் தேதிகளை அறிவிக்கும் தானியங்கி செயல்பாடுகள்
9. வழக்கின் செலவுகளை கண்காணித்தல்
10. வெப் மற்றும் மொபைல் ஆப்ஸ் வழியாக எங்கேயும், எப்போது வேண்டுமானாலும் தேவையான விவரங்களை பார்த்து கொள்ளலாம்.
யார் யார் பயன்படுத்தலாம்?
வழக்கறிஞர்கள்
சட்ட நிறுவனங்களில் பணியாற்றுவோர்
நிறுவன சட்ட ஆலோசகர்கள்
லீகல் அசிஸ்டென்ட்கள்
CaseDockerஐ பயன்படுத்த மாதம் $8.50 முதல் ஆரம்பமாகும் விலையில் வழங்கப்படுவதால், சிறிய சட்ட நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.
CaseDocker-இன் C3 (Connect, Communicate, Collaborate) மாடல் மற்றும் துறையிற்பட்ட செயல்முறை வழிகாட்டிகள் (NPA, இன்சூரன்ஸ் செட்டில்மெண்ட் போன்றவை) இந்திய சட்ட டெக் துறையின் வளர்ச்சிக்கு புதிய ஓரத்தை வழங்குகிறது.
ஏற்கனவே சட்டத்துறைக்கு உதவி செய்ய Civica iCasework, iManage Closing Folders, Jarvis Legal, Sistemas Jurídicos போன்ற செயலிகள் இருக்கும் நிலையில் CaseDocker அவற்றுடன் போட்டியிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஒரு நல்ல வழக்கறிஞருக்கு 10 ஜூனியர் வக்கீல்கள் செய்யும் வேலைகளை இந்த செயலி ஒரே நிமிடத்தில் செய்து அசத்துகிறது.