80% சாப்ட்வேர் எஞ்சினியர் வேலை காலி..   AI செய்யும் மாயாஜாலம்..!

By Bala Siva

Published:

 

AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக உலகம் முழுவதும் 80% சாப்ட்வேர் எஞ்சினியர்கள் வேலை காலியாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே AI தொழில்நுட்பம் மிக வேகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சினிமா துறை முதல் மருத்துவத்துறை வரை அனைத்து துறைகளிலும் மிகவும் நுணுக்கமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என்றும், 80% சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வேலையை இழக்கக்கூடும் என்றும் சமீபத்தில் வெளியான ஆய்வு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பம் மனிதர்களுடன் இணைந்து செயல்படும் என்றாலும், வேலை குறைகளை மேம்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்றும், சில குறிப்பிட்ட பணிகளை முழுமையாக தானியங்கியாக செயல்படுத்துவதால் மனிதர்களின் தேவையை மிகவும் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்தின் சில பணிகளை மாற்றி அமைப்பதற்கு மட்டுமே மனிதர்களை தேவைப்படும், மற்றபடி சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் ஸ்மார்ட்டாக அது விரைவில் செய்து முடிக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 சதவீதம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யும் வேலையை AI தொழில்நுட்பத்தின் மெஷின் லேர்னிங் செய்துவிடும் என்றும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு மிகப்பெரிய கவலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. AI மூலமாக உருவாக்கப்படும் பணிகளில் சில பிழைகள் இருப்பதாகவும், ஆனால் அது இன்னும் சில ஆண்டுகளில் சரியாகிவிடும் என்றும், AI தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.