ஏஐ என்பது கருவி அல்ல, ஒரு ஏஜண்ட்.. நம்மை அடிமையாக்கிவிடும்: வரலாற்று பேராசிரியர் எச்சரிக்கை..!

  ஏஐ என்பது ஒரு கருவி அல்ல; அது ஒரு ஏஜென்ட். அது நம்முடைய கட்டுப்பாட்டில் தற்போது இருந்தாலும், விரைவில் அதனுடைய கட்டுப்பாட்டுக்கு நாம் வந்து விடுவோம் என்றும், அதற்கு மனிதர்கள் அடிமையாகி விடுவார்கள்…

AI technology

 

ஏஐ என்பது ஒரு கருவி அல்ல; அது ஒரு ஏஜென்ட். அது நம்முடைய கட்டுப்பாட்டில் தற்போது இருந்தாலும், விரைவில் அதனுடைய கட்டுப்பாட்டுக்கு நாம் வந்து விடுவோம் என்றும், அதற்கு மனிதர்கள் அடிமையாகி விடுவார்கள் என்றும் வரலாற்று பேராசிரியர் ஒருவர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல வரலாற்று பேராசிரியர் யுவால் நோவா ஹராரி என்பவர் மும்பையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, கற்காலத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு காலம் வரை தகவல் பரிமாற்ற முறைகள் குறித்து அவர் பேசினார்.

“ஏஐ நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை ஆபத்து இல்லை. ஆனால் அது நம்மை அடிமையாக்கி நம்மை கட்டுப்படுத்தி விட்டால் ஆபத்து. ஏனெனில், ஏஐ என்பது ஒரு கருவி அல்ல; அது ஒரு ஏஜென்ட்.

ஒரு புத்தகம் அல்லது அச்சகம் நமது கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு அச்சகத்தால் புதிய புத்தகத்தை உருவாக்க முடியாது. ஆனால் நம்மால் செய்ய முடியாத புதிய விஷயங்களை உருவாக்கும் திறன் தற்போது ஏஐ-க்கு உள்ளது. டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை உருவாக்கும் திறனை ஏஐ பெற்றுவிட்டது.

அதே நேரத்தில், சுயமாக கற்று அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதனால், ஏஐ மனிதனின் கட்டுப்பாட்டை மீறி நம்மை அடிமையாக ஆக்கும் ஆபத்து உள்ளது. அதனை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நாம் அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.