AI என்பது தற்போது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், சார்ஜ் ஜிபிடி, ஜெமினி உள்ளிட்டவை எழுத்து வடிவில் நமக்கு பல தகவல்களை பெற்றுத் தருகின்றன.
அதேபோல், கலை படைப்புகளை உருவாக்கும் ஏ.ஐ நிறுவனங்களும் வைரல் ஆகி வருகின்றன. இமேஜ் ஜெனரேட்டரில் முன்னோடியாக உள்ள அமைப்புகள் உருவங்களை உருவாக்கும் கருவிகளுக்கு முறையாக மனிதர்களால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நம் எதிர்பார்ப்புகளை சில நிமிடங்களில் ஓவியங்கள் மூலம் பூர்த்தி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்,ரீ-கிராஃப்ட்’ என்ற புதிய ஏ.ஐ இமேஜ் கிரியேட்டர் சேவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நாம் எதிர்பார்க்கும் உருவங்களை சில நொடிகளில் வரைந்து கொடுக்கிறது. மேலும், இது வரைகலை கலைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் ஒரு வரைகலை கலைஞர் என்றால், https://www.recraft.ai/generate/characters என்ற இணையதளத்தை பயன்படுத்தி இது எப்படி இருக்கிறது என்பதை சொல்லுங்கள்.