டாக்டர்கள் ஒரு நோயாளியை சோதனை செய்யும் போது நோயாளியின் தகவல்களை அருகில் இருக்கும் நர்ஸ் ஒருவர் குறிப்பு எடுத்துக் கொள்வார். பின்னர் அந்த குறிப்புகளை ஆய்வு செய்து அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்வார்கள்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் தற்போது புதிய AI கருவியை அறிமுகம் செய்துள்ள நிலையில் இது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரை முறைகளை வகுத்து தருகிறது. இதனால் இனிமேல் நோயாளி பற்றிய குறிப்பு எடுப்பதற்கு நர்ஸ் அல்லது அவருக்கு இணையான இன்னொருவர் தேவைப்படாது என்றும் டாக்டரே தனது AI உதவியாளர்கள் மூலம் நோயாளிகளின் முழு விவரத்தை பதிவு செய்து வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த AI உதவியாளரின் பெயர் Dragon Copilot. இந்த கருவி குரல் அபதிவேற்றம் (speech recognition) மற்றும் உற்பத்தி செயல் AI (generative AI) இணைப்பதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் நிர்வாகச் சுமையை குறைக்கிறது. மேலும் இது ஆட்டோமேடிக் டாக்யூமண்டேஷன், நோயாளி தகவல்களை கண்டறிதல், மற்றும் மருத்துவ வேலைகளை எளிமைப்படுத்துகிறது
இந்த Dragon Copilot என்ற AI கருவி மருத்துவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தற்போது பார்ப்போம். Dragon Copilot-ன் முக்கிய அம்சங்களில் ஒன்று தானியங்கி மருத்துவ ஆவணத்தொகுப்பு ஆகும். இதன் மூலம், மருத்துவர் மற்றும் நோயாளி இடையேயான உரையாடல் தானாகப் பதிவாகும். இதற்காக கைமுறையாக டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இது மருத்துவர்களுக்கு நோயின் தன்மையை அறிந்து சிகிச்சையை மாற்றியமைக்க உதவுகிறது.
எத்தனை ஆண்டுகள் கழித்து அதே நோயாளி மீண்டும் வந்தால் அவருடைய குறிப்புகளை தேட, என்னென்ன சிகிச்சை அவருக்கு அளித்தோம் என்பதை தெரிந்து கொள்ள, அவருடைய குடும்ப மருத்துவ பின்னணியை பெற,
சமீபத்திய பரிசோதனை முடிவுகளை பெற என அனைத்திற்கும் இந்த கருவி உதவியாக இருக்கும்.