அதேபோல், அறுவை சிகிச்சைகளிலும் ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் செலவினத்தில் 3.5% ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டில் அதனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தினமும் 2 முதல் 3 மணி நேரம் மிச்சமாகும் என கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் நிறுவப்படும் AI கருவிகள், நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை பகுப்பாய்வு செய்து நோயறிதல், பரிசோதனை, சிகிச்சை பரிந்துரைகளை வழங்கும். மருத்துவர்களின் குறிப்புகளை விரைவாக எழுதவும், செவிலியர்கள் தினசரி அட்டவணைகளை உருவாக்கவும் உதவுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, அப்பல்லோ மருத்துவமனை புதிய கிளைகளை திறந்து விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், தொழில்நுட்பத்தின் பயன்பாடு அவசியமாகிறது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், AI பயன்பாடு செவிலியர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய செவிலியர் பணி விலகல் வீதம் 25% ஆக உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இது 30% ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், புதிய செவிலியர்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படாது என்பதும் ஒரு முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது.
அனைத்து துறைகளிலும் AI நுழைந்து மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு சவாலாக இருந்து வரும் நிலையில், இனிமேல் செவிலியர் பணியிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.