ஏஐ மூலம் தான் இனி எல்லாமே.. சினிமா கலைஞர்களுக்கு பாதிப்பா?

By Bala Siva

Published:

 

ஏ.ஐ. டெக்னாலஜி என்பது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்ட நிலையில், சினிமா துறையிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சினிமா கலைஞர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் வேலைக்கு ஆபத்து உள்ளது என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகை பொருத்தவரை, தற்போது ஏ.ஐ. என்பது இறந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தி பாடல்கள் உருவாக்குவது, இறந்த நடிகர்களை மறு நடிப்புக்கு கொண்டு வருவது போன்ற அளவில்தான் உள்ளது. ஆனால் பாலிவுட்டில் ஏ.ஐ. தொழில்நுட்பம் டப்பிங், எடிட்டிங், கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஹாலிவுட்டில் கதை, உரையாடல் உள்ளிட்ட பல துறைகளில் ஏ.ஐ. பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வருங்காலத்தில் சினிமா கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை இல்லாமல் போய்விடும் என்ற ஆபத்தும் உள்ளது.

ஏ.ஐ. தொழில்நுட்பம் பல ஐடியாக்களை உருவாக்குவதால், தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஏஐ சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்கு சவாலாக இருந்தாலும், மனிதன் இல்லாமல் ஏஐ செயல்பட முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் படைப்பாற்றலை குறைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மனிதர்கள் சிந்திக்காமல், சாட்-ஜிபிடியில் இருந்து அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், எதிர்கால ஏ.ஐ. உலகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.