தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ். 1944 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ் படிப்பை முடித்த பிறகு 1964 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். அங்கு 10 வருடங்கள் 1974 வரை பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில் தக்ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடக குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். அதனால்தான் இவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் ஏற்பட்டது. நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தால் விமானப்படையில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்குள் நுழைந்தார் டெல்லி கணேஷ்.
1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததற் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் டெலிகணேஷ். இவரை அறிமுகப்படுத்தி வைத்தது இயக்குனர் கே பாலச்சந்தர். 1979 ஆம் ஆண்டு பசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திறப்புமுனையை பெற்றார். இந்த திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகர் விருதை வென்றார் டெல்லி கணேஷ்.
தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றார் டெல்லி கணேஷ். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். வயது மூப்பு ஆனாலும் இறுதி வரை ஓயாது நடித்துக் கொண்டிருந்தவர் டெல்லி கணேஷ்.
இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு 11:30 மணி அளவில் உடல் நல குறைவினால் காலமானார். இந்த செய்தி திரையுலகை அதிர்ச்சடைய வைத்திருக்கிறது. இது பற்றி அவரது மகன் மகா டெலி கணேஷ் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நேற்று இரவு அப்பா நல்லா தான் பேசிக்கிட்டு இருந்தாங்க. நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க. அப்புறம் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் படுக்கிறேன்னு படுத்தாங்க. அதுக்கப்புறம் மாத்திரை கொடுக்கணும் அப்படின்னு நாங்க எழுப்பும்போது ஒரு அசைவுமே இல்ல அப்பதான் உயிர் போயிருச்சு என்று உருக்கமாக பேசியிருக்கிறார் டெல்லி கணேஷ் அவர்களின் மகன் மகா டெல்லி கணேஷ்.