இனி 24 மணி நேரம் அல்ல..25 மணி நேரம்.. ஆனா இப்போ அல்ல எப்போதிருந்து தெரியுமா?

வான்வெளியில் எண்ணற்ற அதிசயங்கள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. காலநிலை மாற்றம், புதிதாக கோள்கள் உருவாவது, எரிகற்கள், வால் நட்சத்திரங்கள், சூரிய குடும்பத்தின் மாறுதல்கள், பால்வெளி அண்டக் கோட்பாடு மாற்றம் என மாறுதல்கள் ஏற்பட்டுக்…

Earth

வான்வெளியில் எண்ணற்ற அதிசயங்கள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. காலநிலை மாற்றம், புதிதாக கோள்கள் உருவாவது, எரிகற்கள், வால் நட்சத்திரங்கள், சூரிய குடும்பத்தின் மாறுதல்கள், பால்வெளி அண்டக் கோட்பாடு மாற்றம் என மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. மேலும் பூமியிலிருந்து விண்வெளி ஆய்வு மையங்கள் அனுப்பிய செயற்கைக் கோள்கள் மூலமாக செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா இல்லையா? சந்திரனில் காற்று உள்ளதா என்ற ஆராய்ச்சியும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் வைத்து பூமியில் நடக்கும் காலநிலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வானியல் சாஸ்திரப்படி பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் 365 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டும், தன்னைத் தானே சுற்றி வர 24 மணிநேரங்கள் எனக் கணக்கிடப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் தான் இரவு பகல் ஏற்படுகிறது. மேலும் வடதுருவத்தில் பகல் என்றால் தென்துருவத்தில் இரவாக இருக்கும். இதனை வைத்து பூமத்திய ரேகை வரையப்பட்டு மணி கணக்கிடப்படுகிறது.

நீங்க மதுரைக்காரரா..? கொண்டாடத் தயாராகுங்கள் மா மதுரைத் திருவிழாவை..

இப்படி தோண்டத் தோண்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்துள்ள இந்த பூமியில் 24 மணி நேரம் இனி 25 மணி நேரமாக மாறப் போகிறது. இதற்கு முழு காரணம் நம்மையே சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரன் தான். பூமிக்கென்று உள்ள ஒரே துணைக்கோளான சந்திரனின் நிலைபாட்டில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக அது பூமியை விட்டு மெல்ல விலகிச் செல்கிறது.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மடிசான் பல்கலைக்கழக பேராசிரியர் விஸ்கான்சின் என்பவர் நடத்திய ஆய்வில் பூமியை விட்டு நிலா விலகிச் செல்வதால் அடுத்த 20 கோடி ஆண்டுகளில் 24 மணி நேரம் என்பது 25 மணிநேரமாக இருக்கும். இதுவே கடந்த 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் ஒருநாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது என்றும், பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையின் காரணமாக நிலா பூமியை விட்டு ஆண்டுக்கு 3.8 செ.மீ என்ற தூர கணக்கில் விலகிச் செல்வதாலும் இனி ஒரு நாளின் மணித்துளி 25 மணிநேரமாக உயரும் என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளார் விஸ்கான்சின். இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தனது ஆய்வில் கூறியிருக்கிறார்.