ஆனால் அந்த அளவிற்கு லட்சக்கணக்கில் செலவழிக்காமல், சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து செய்யப்படும் விளம்பர யுக்தி வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என விளம்பரங்களை ஆராயும் ஆலோசகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் திறக்கப்பட்ட ஒரு ஜவுளிக்கடை எந்தவித மீடியாக்களிலும் விளம்பரம் செய்யாமல், “ஒரு சேலை 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்” என்று அறிவித்தது. அதன் காரணமாக கடை திறக்கப்பட்ட ஒரே நாளில் 15,000 சேலைகள் விற்பனையாகியதாம். இதனால் கடை ஓனருக்கு ரூ.15,000 நஷ்டம் தான்.
ஆனால் 15 ஆயிரம் சேலை வாங்கிய பெண்களிடமிருந்து, மொபைல் எண்கள் மற்றும் முகவரிகள் ஆகியவற்றை அந்த கடை ஊழியர்கள் சேகரித்து வைத்துள்ளனர். இதன் மூலம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தங்களிடம் வரும் புதிய டிசைன்களை வாட்ஸ்அப் மூலம் 15 ஆயிரம் பேருக்கும் அனுப்ப முடிகிறது; இதன் மூலம் வியாபாரம் பெருகும் என்பதே கடை உரிமையாளரின் யுக்தி. 79 ரூபாய்க்கு சேலை வாங்கிய பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இதை பகிர்வர், இது தானாகவே விளம்பரமாக பரவும் என்பதே இந்த யுக்தியின் முக்கிய புள்ளியாகும்.
அதேபோல், லட்சக்கணக்கில் செலவழித்து சினிமா அல்லது தொலைக்காட்சி பிரபலங்களிடம் விளம்பரம் செய்வதற்கு பதில் YouTube பிரபலங்களிடம் விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சில ஆயிரங்கள் மட்டும் கொடுத்தாலே அதிகமான சப்ஸ்கிரைப் வைத்திருப்பவர்களிடம் விளம்பரம் செய்யும்போது நல்ல ரீச் கிடைக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.