பாஜகவுடன் அதிமுக நேரடி கூட்டணி.. திமுக மறைமுக கூட்டணி.. விஜய் சொன்னது சரிதான்.. இனியும் பாச்சா பலிக்காது.. 2026ல் ஆட்டநாயகன் விஜய் தான்..!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணி வியூகங்கள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக மற்றும் தேசிய…

admk dmk bjp

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணி வியூகங்கள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக மற்றும் தேசிய கட்சியான பாஜகவின் உறவுகள் குறித்த சந்தேகங்களும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சியும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

திமுக – பாஜக அடித்துக்கொள்வது போலத்தெரிவார்கள், ஆனால் பின்னால் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதை நாங்கள் நம்ப வேண்டுமா?” என்று நடிகர் விஜய் ஒரு கூட்டத்தில் தெரிவித்தது கிட்டத்தட்ட சரிதான் என்று மக்கள் தற்போது உணர தொடங்கியுள்ளனர்,.

பாஜகவுடன் திமுக மறைமுகக் கூட்டணிதான் வைத்துள்ளது என்றும், திமுகவை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு என்பது முழுக்க முழுக்க வேஷம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் நேரடியாக டெல்லி சென்று தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள பாஜகவை திமுக பயன்படுத்திக் கொள்வதாகவும் திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் தான் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“அதிமுக பாஜகவுடன் நேரடி கூட்டணியில் இருக்கிறது என்றால், திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது. இந்தியாவிலேயே காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மட்டும்தான் இதுவரை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை, இனியும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. மற்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று உத்தரவாதம் தர முடியாது. பாஜக எதிர்ப்பு என்பதெல்லாம் வெறும் வேஷம். அதை தமிழகத்தில் வெறும் வாக்குகள் பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், உள்ளுக்குள் பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது,” என்றுதான் அரசியல் மத்தியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கு சிக்கல் கொடுக்க திமுகவின் வியூகம்?

நடிகர் விஜய் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரு அச்சுறுத்தல் என்பதால், பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி சேர்ந்து விஜய்க்கு சிக்கல் தர திமுக முயற்சி செய்கிறது என்றொரு கருத்து நிலவுகிறது. விஜய்யை எப்படியாவது பாஜக கூட்டணிக்கு கொண்டு வர அதிமுக ஒருபக்கம் முயற்சி செய்தது. ஆனால், விஜய் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மொத்தத்தில், இந்த தேர்தலில் விஜய் தான் ஆட்டநாயகனாக இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘கோ பேக் மோடி’ என்று கோஷமிட்டது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது, மோடி தமிழ்நாட்டுக்கு வருவது தமிழகத்தின் பெருமை என்று கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை மோடி வந்தும், திமுக ஒருமுறை கூட அவருக்கு கருப்புக் கொடி காட்டவோ அல்லது ‘மோடியே திரும்பிப் போ’ என்றோ கூறவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு விதமாகவும், ஆளுங்கட்சியாக மாறும்போது ஒரு விதமாகவும் நடப்பது திமுகவுக்கு வழக்கமான ஒன்றே.

ஆனால், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் உள்ள ரகசிய உறவை விஜய் தனது பிரச்சாரத்தின் போது வெளிப்படுத்துவார் என்றும், அப்போது சில திடுக்கிடும் தகவல்களை அவர் கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இனி வரும் காலம் அரசியல் சூடு பிடிக்கும் காலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் பல எதிர்பாராத திருப்பங்களை காணும் என்று அரசியல் நோக்கர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.