இந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காரணம், அதானி நிறுவனங்களின் மீது லஞ்சம் மற்றும் மோசடி வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது தான். இந்த செய்தியின் பின், நேற்று இந்திய பங்குச் சந்தை ரணகளமாக மாறியது. குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 23 சதவீதம் வரை குறைந்தன. அதானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மிக மோசமாக 22 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், அதானி எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் பெரும் வீழ்ச்சியை அனுபவித்தன.
ஒட்டுமொத்தமாக, 2 லட்சம் கோடிக்கு மேல் அதானி குழுமத்தின் மதிப்பு குறைந்துள்ளது. குற்றச்சாட்டுக்கு முன்னர் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 14.3 கோடியாக இருந்தது, ஆனால் இப்போது அது 12.10 லட்சம் கோடியாக சரிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகும் அல்லது மீண்டு வரவே முடியாது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.