நீங்க எல்லாம் மனுஷங்களா.. ஜூனியர் என்டிஆர் ரசிகர்களால் கோபத்தின் உச்சத்திற்கே போன நடிகை வேதிகா..

தமிழ் சினிமாவில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன், விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர், பிரபுதேவா நடிப்பில் பெட்ட ராப் உள்ளிட்ட திரைப்படங்கள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

vedhika angry on junior ntr fans

தமிழ் சினிமாவில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன், விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர், பிரபுதேவா நடிப்பில் பெட்ட ராப் ள்ளிட்ட திரைப்படங்கள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தனை தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா படத்தின் தமிழ் டப்பிங் வெளியாகி உள்ளதால் இந்தத் திரைப்படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற தமிழ் படங்களுக்கு நிகராக தேவாரா படத்தையும் ரசிகர்கள் கூட்டமாக சென்று திரையரங்கில் பார்த்து வருவதால் ஜூனியர் என்டிஆர் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இந்த திரைப்படம் ஓடுவதற்கு அனிருத் தேவாராவிற்கு இசையமைத்திருந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. RRR திரைப்படத்தின் மூலம் தமிழில் அதிக ரசிகர்களை சம்பாதித்திருந்த ஜூனியர் என்டிஆரின் தேவாரா படம் வெளியாவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் திரைப்படமும் தற்போது நன்றாக இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேவாரா படத்தின் கொண்டாட்டத்திற்காக ஜூனியர் என்டிரின் ரசிகர்கள் செய்த விஷயங்களும், அதற்காக நடிகை வேதிகா கோபத்துடன் குறிப்பிட்ட சில கருத்துக்களும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் வெளிவரும் போது அதனை ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், பேனர்கள் வைத்தும் விமரிசையாக கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் தேவாரா படத்தின் ரிலீசுக்காக ஒரு ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தையும் ஜூனியர் என்டிஆர் மீது ஊற்றி, அதன் தலையை அவர் பேனரில் வைத்து மிக மோசமாக கொண்டாடி இருந்தனர். அது மட்டுமில்லாமல் இதனை வீடியோவாகவும் பகிர்ந்து அவர்கள் இணையத்தில் வெளியிட பார்ப்போர் பலரும் கடும் ஆவேசத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வீடியோவை பார்த்த நடிகை வேதிகா, “கடவுளே இது மிகவும் பயங்கரமான சம்பவம். தயவு செய்து இது போன்ற செயல்களை நிப்பாட்டுங்கள். அந்த வாயில்லா அப்பிராணிக்கா எனது இதயம் நொறுங்கிப் போனது. ந்த அளவுக்கு சித்திரவதையும், அதிர்ச்சியும் இந்த வீடியோவில் உள்ளது. எப்படி வாயில்லா ஒரு ஜீவனுக்கு இந்த அளவு மோசமாக உங்களால் தீங்கு செய்ய முடியும்.
vedhika angry

எந்த ஒரு உயிரினத்திற்கும் இப்படியான ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. அதன் ஆத்மா சாந்தியடைய நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் மனிதனாக தோற்று விட்டோம்” என உருக்கமாகவும் அதே வேளையில் ஆவேசமாகவும் இந்த கருத்தை நடிகை வேதிகா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.