விஜய் சினிமாவை விட்டு போயிட்டா சினிமா ஒண்ணும் பாதிக்காது.. தளபதி ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி..

தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழகம் முழுவதும் பலமான அடித்தளத்திற்கு அச்சாரம் இட்டுக் கொண்டிருக்கும் வேளையில் விஜய்யும் தற்போது நடித்து வரும் தி கோட் படத்தினையடுத்து தளபதி 69 உடன் தன்னுடைய சினிமா பயணத்திற்கு விடை கொடுக்கப் போவதாக அண்மையில் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் என் இலக்கு என்ற முனைப்புடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழகம் முழுவதும் அடிமட்ட லெவலில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் பேச்சு அடிபட்டு வரும் வேளையில் விரைவில் ஒரு பெரிய மாநாடு ஒன்றை நடத்தி அதில் கட்சியின் கொள்கை, செயல்பாடுகள், நிர்வாகிகள் என அனைத்தையும் விஜய் அறிவிப்பார் என்று தகவல் பரவிவருகிறது. இந்நிலையில் விஜய் சினிமாவிலிருந்து விலகப் போவது குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்யராஜுக்கு நடிகனாக விதை போட்ட விஜயக்குமார் படம்.. பதிலுக்கு தாய்மாமனாக நின்ற தருணம்

அதில், நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவது சினிமாத் துறையைப் பாதிக்காது. விஜய் கடந்த 30 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். ஆனால் சினிமா 150 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நபருக்காக சினிமா நிற்காது. சினிமா ஒரு கலை. அது அனைவரின் பங்களிப்பையும் சேர்த்து வளருமே தவிர அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.என்று தெரிவித்திருக்கிறார். வருகற ஜுன் 22-ல் விஜய்யின் 50-வது பிறந்த நாளையொட்டி அடுத்த படம் அப்டேட் வெளிவரலாம் என எதிர்பார்க்கும் வேளையில் நடிகை கஸ்தூரியின் இந்தக் கருத்து விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்த கஸ்தூரி தற்போது அரசியல் விமர்சகராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.