சத்யராஜுக்கு நடிகனாக விதை போட்ட விஜயக்குமார் படம்.. பதிலுக்கு தாய்மாமனாக நின்ற தருணம்

புரட்சித் தமிழன் என தமிழ்த் திரையுலகில் கொண்டாடப்படும் நடிகர் சத்யராஜ் எந்தக் கதபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதிப்பவர். சினிமாவில் தற்போது படுபிஸியான நடிகராக விளங்கி வரும் சத்யராஜ் வில்லன்,ஹீரோ, குணச்சித்திரம் என பன்முகக் கலைஞனாக விளங்கி வருகிறார். தீவிர பெரியார் பக்தனாகவும், எம்.ஜி.ஆர்.விசுவாசியாகவும் விளங்கும் சத்யராஜ் மூட நம்பிக்கைக் கருத்துக்களை கவுண்டமணியுடன் சேர்த்து சினிமா வாயிலாக கொண்டு சேர்த்ததில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

வேதம் புதிது, அமைதிப் படை, வில்லாதி வில்லன், நூறாவது நாள், கடலோரக் கவிதைகள், பாகுபலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பெரியார் போன்ற பல படங்கள் சத்யராஜின் பெயர் சொல்லுபவை. இவ்வாறு தென்னிந்திய மொழிகளில் புகழ்பெற்ற நடிகராக விளங்கும் சத்யராஜ் நடிகர் விஜயக்குமாரின் நெருங்கிய நண்பராக விளங்கி வருகிறார்.

ஆம்னி பஸ் பயணம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே டிக்கெட்டை கேன்சல் பண்ணுங்க..

இவர் கோவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சிவக்குமார், விஜயக்குமார், ஜெயச்சித்ரா நடித்த பொன்னுக்குத் தங்க மனசு என்ற படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அப்போது தன் நண்பர்களுடன் சென்று இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார் சத்யராஜ். படம் முடிந்து வெளியே வரும் போது சத்யராஜைப் பார்த்த சில ரசிகர்கள் படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியைச் சொல்லி இதில் நடித்தது நீங்கள் தானே என்று கேட்டிருக்கின்றனர். சத்யராஜ் அப்போது வாட்டசாட்டமாக, சிவப்பாக இருந்ததால் அருகில் இருந்த அவரது நண்பர்கள் ஆம் என்றிருக்கின்றனர்.

அப்போது சத்யராஜுக்கு உள்ளுக்குள் ஓர் பெருமிதம் ஏற்பட்டிருக்கிறது. தன்னை சினிமா நடிகர் போல் உள்ளதாக கூறுகின்றனரே என்று அன்றைக்கு அவர் மனதில் சினிமாவிற்குச் செல்லலாம் என்று தோன்றியிருக்கிறது. அதன் விளைவாக சென்னை வந்து சினிமாவில் நுழைந்து இன்று மிகப்பெரும் நடிகராக விளங்கி வருகிறார் சத்யராஜ். மேலும் நடிகர் விஜயக்குமாருடன் பல படங்களில் இணைந்து நடித்ததால் அவரின் நெருங்கிய நண்பரானார். விஜயக்குமாரின் மூத்த மகள் திருமணத்தின் போது தாய்மாமனாக நின்று சடங்குகளை நிறைவேற்றியிருக்கிறார் சத்யராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews