பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 2.6 கிலோ போதை பொருள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதை மாநிலத்தின் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து விசாரணை செய்தனர். அப்போது ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தான் போதைப்பொருள் கடத்தப்படுகிறது என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து இரண்டு வெளிநாட்டினர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து விசாரணை செய்த போது இந்த கும்பலுக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் அமன் பிரீத் சிங் என்பவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அமன் பிரீத் சிங் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தற்போது ஐந்து பேரை கைது செய்து உள்ளோம் என்றும் அவர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்தி அது உறுதி செய்யப்பட்டதாகவும் தற்போது அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் ஹைதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் தற்போது அவரது சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
