ஆமா.. நான் சாதி வெறியன் தான்.. சொல்லிங்கோங்க.. தப்பு ஒண்ணும் இல்ல.. நடிகர் ரஞ்சித் பரபரப்பு பேச்சு

By John A

Published:

சமூக நீதியைப் பற்றி யாராச்சும் பேசுனா எனக்கு கடுங்கோவம் வந்திடும்.. என்ன உங்க சமூக நீதி என நடிகர் ரஞ்சித் பரபரப்பாக பேசியுள்ளார். நடிகர் ரஞ்சித் நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் வருகிற ஜுலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஞ்சித் சமூக நீதி பற்றியும், கள்ளச்சாராயம் பற்றியும் பேசியுள்ளார்.

சமூக நீதி பற்றி செய்தியாளர்கள் கேட்ட பொழுது, பெத்த புள்ளைய கஷ்டப்பட்டு படிக்க வச்சு, ஆளாக்கும் போது கண்டவன் வந்து தூக்கிட்டு போறதுதான் உங்க சமூக நீதி காதலா..? சமூக நீதி என்பதே தவறு. உங்க செல்போன், கார், செருப்பு காணாமல் போனால் கூட காவல் நிலையத்தில் புகார் கொடுக்குறீங்க.. அந்த வழக்கெல்லாம் எடுத்துகிறீங்க..

கஷ்டப்பட்டு பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் போது அந்தப் புள்ள காணமல் போகுது.. அதுக்கு என்ன பாதுகாப்பு? நாலுபேர் போய் கையெழுத்து போட்டா அது கல்யாணம் ஆகிடுமா? அப்போ பெத்தவங்க நிலை என்ன? அவங்களோட வலி என்ன? அவங்க கண்ணீர்? என்றைக்கு இந்த சமூக நீதின்னு சொல்லிட்டு ஏமாத்துறீங்களோ அவங்க முதல்ல தன்னோட குடும்பத்துல ஒரு சமூக நீதி கல்யாணத்தை முடிச்சிட்டு அடுத்தவன் மகளுக்கு செஞ்சா அது சிறப்பு.

உங்க ரீல்ஸ் மோகத்துக்கு அளவே இல்லையா..? உச்சிமாடியில் குலை நடுங்க வைத்த சம்பவம்..

இது எல்லாமே சாதி, மத பிரிவினையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடக்கிறதே தவிர வேற ஒண்ணும் இல்ல. பெத்தவங்க கையெழுத்து இல்லாம திருமணத்தை பதிவு செய்யக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது என் எண்ணம். அப்படி கொண்டு வந்தாலே இதுபோல நாடகக் காதல் நடக்காது.

ஆணவக் கொலை, அடிதடி, கலாட்டா என எதுவுமே நடக்காது. பெத்தவங்க மட்டுமே உயர்ந்த சாதி. அதை சமூக நீதின்னு ஒத்த வரியில தூக்கிட்டு போய்டாதீங்க.. இது போன்ற பல விஷயங்களைப் பேசுகிற படமாகத்தான் கவுண்டம்பாளையம் இருக்கும். நாடகக் காதல்ன்னு சொன்ன என்னை சாதி வெறியனா பார்க்குறீங்க.. அப்படி பெத்தவங்கள எதிர்த்து செய்யுற திருமணத்தை நான் நாடகக்காதல்ன்னு சொல்றப்ப என்னை சாதி வெறியன்னு சொன்னா.. ஆமா நான் சாதி வெறியன் தான்.. ஆனா பெத்தவங்களுக்கத் தெரியும்.” என்று செய்தியாளர் சந்திப்பில் ரஞ்சித் பேசினார்.