உங்க ரீல்ஸ் மோகத்துக்கு அளவே இல்லையா..? உச்சிமாடியில் குலை நடுங்க வைத்த சம்பவம்..

சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளும் பெற வேண்டும் வைரலாக வேண்டும் என்பதற்காக இன்று பலர் ரீல்ஸ் வாயிலாக தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அதில் நல்ல முறையில் தங்களது திறமைகளை நிரூபித்து புகழ்பெற்றவர்கள் ஏராளம். ஆனால் சிலர் லைக்குக்காக செய்யும் காரியங்கள் காண்பவர்களை முகம் சுளிக்க வைக்கவும், குலை நடுங்கவும் வைக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் ஐம்புல்வாடி என்ற இடத்தில் நாராயண் மந்திர் என்ற பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இளம்பெண் செய்த பகீர் காரியம் காண்பவர்களைக் குலை நடுங்க வைத்துள்ளது. உச்சி மாடியில் இருந்து கட்டிடத்தின் பின்பக்கம் வழியாகக் கீழே இறங்க முயன்றார்.

மதுவிலக்கு கொள்கை என்பது வெறும் பேசுபொருள் தானா? நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை

அவர் இறங்கியது படிக்கட்டுகளின் வழியாக அல்ல. அந்தரத்தில் பறந்து கொண்டே. அவரின் கையை ஒருவர் பிடித்துக் கொள்ள பல அடி உயரத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டே கீழே இறங்க முயன்றிருக்கிறார். இதனை ஒருவர் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட இந்த வீடியோ வைரலானது.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், முன் அனுமதி பெறாமல் அவர்கள் எடுத்த இந்த ரீல்ஸ் வீடியோவைக் கண்டாலே நெஞ்சைப் பதற வைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து புனே பாரதி வித்யா பீட் காவல் துறையினர் இவர்கள் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வாறு விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ரீல்ஸ் எடுத்து அதன் மூலம் உயிரிழப்புகள் அதிகமாகி வரும் வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews