தமிழ் சினிமாவில் பிரபலமாக முன்னணி நடிகராக இருந்தவர் நெப்போலியன். 1990களில் புகழின் உச்சியில் இருந்தவர் நெப்போலியன். அந்த நேரத்தில் வெளியான கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் அனைத்திலும் நடித்திருப்பார். இவரது உடல் தோற்றமும் முறுக்கு மீசையும் கிராமத்து முகமும் இவரை பிரபலமாக்கியது.
நெப்போலியன் ராஜசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள். இதில் மூத்த மகன் தனுஷ் குழந்தை பருவத்தில் இருக்கும் போதே Muscular Dystrophy இன்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயை அரியவகை நோயானதால் இதற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை அதனால் இவரது வாழ்க்கையில் முழுவதும் வீல் சேரில்தான் அமைந்திருக்கும்.
அது மட்டுமல்லாமல் 17 வயதுக்கு மேல் நெப்போலியனின் மகன் உயிரோடு இருக்க மாட்டார் என மருத்துவர்கள் கூறினார். ஆனாலும் நெப்போலியன் மனம் தளராது போராடி தனது மகனுக்கு சிகிச்சை அளித்து இன்று ஓரளவு சரியாக்கி வைத்திருக்கிறார். தற்போது இவரது மகன் தனுஷின் திருமண வைபவம் ஜப்பானில் விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது.
திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் தனுஷுக்கும் திருமணம் நடந்தது. இதை பார்த்த மக்கள் பலரும் பேட் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இதைப் பற்றி நெப்போலியன் அவர்களின் மனைவி சுதா பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் முதலில் பொண்ணு கிட்ட நான் தனியா பர்சனலா போய் கேட்டேன். உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா தனுஷை பற்றி முழுவதுமாக தெரியுமா? யாராவது போர்ஸ் பண்ணாங்களா அப்படினு நான் கேட்டேன்.
அப்போ எங்களோட மருமகள் அக்ஷயா யாருமே என்ன கல்யாணத்துக்கு போர்ஸ் பண்ணல எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் விரும்பி தான் கல்யாணம் பண்றேன் அப்படின்னு அவங்க சொன்னதுக்கு அப்புறம் தான் நாங்க கல்யாணம் ஏற்பாடு எல்லாமே செஞ்சோம். இது போர்ஸ்ட் மேரேஜ் எதுவுமே கிடையாது. ரொம்ப சந்தோசமா ரெண்டு குடும்பமும் ஒத்துக்கிட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம். என் பையனுக்கு ஒரு துணை வேணும். அவங்க ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்கு. அதை பாக்குறது எங்களுக்கும் சந்தோஷம் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சுதா.