உலகின் முன்னணி கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Acer புதிய மாடல் லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் அந்த மாடலின் விலை 2 லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய உலகில் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையில் லேப்டாப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிக தேவையை கணக்கில் கொண்டு Acer நிறுவனம் புதிய மாடல் லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
Acer 240 ஹெர்ட்ஸ் என்ற மாடல் லேப்டாப் 16-இன்ச் WQXGA (2560 x 1600) டிஸ்ப்ளேவைக் கொண்டது. புதிய கேமிங் லேப்டாப்பான இதில் Intel Core i9-12900H பிராஸசர் மற்றும் NVIDIA GeForce RTX 3080 Ti கிராபிக்ஸ் கார்டு ஆகிய அம்சங்கள் உள்ளன. 64ஜிபி வரை DDR5 ரேம் மற்றும் 2TB வரை PCIe Gen 4 SSD ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடல் பயனர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Predator Triton 16 என்பது மெல்லிய மற்றும் இலகுவான கேமிங் லேப்டாப் ஆகும். இந்த மாடல் லேப்டாப் வெறும் 19.9mm தடிமன் மற்றும் 2.4kg எடை கொண்டது. Predator Triton 16 ஆனது வட அமெரிக்காவில் ஜூலை மாதம் $2,499 விலையில் கிடைக்கும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.06,000 ஆகும்.
Acer Predator Triton 16 இன் சில முக்கிய அம்சங்கள் இங்கே:
* 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் 16-இன்ச் WQXGA (2560 x 1600) டிஸ்ப்ளே
* இன்டெல் கோர் i9-12900H செயலி
* NVIDIA GeForce RTX 3080 Ti கிராபிக்ஸ் கார்டு
* 64ஜிபி வரை DDR5 ரேம்
* 2TB வரை PCIe Gen 4 SSD ஸ்டோரேஜ்
* 2.4 கிலோ எடை மற்றும் 19.9மிமீ தடிமன் கொண்டது
விலை $2,499 முதல்