விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு.. இரண்டையும் எடுக்க வேண்டுமா?

By Bala Siva

Published:

 

எதிர்பாராமல் ஏற்படும் விபத்து மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் நோய் ஆகியவற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், இரண்டையும் ஒருவர் எடுக்க வேண்டியது அவசியமா, ஒன்று மட்டும் எடுத்தால் போதாதா என்ற சந்தேகம் பலருக்கு வருகிறது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு ஆகிய இரண்டும் வெவ்வேறானது என்ற அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, ஒருவர் இரண்டையும் எடுப்பது அவசியமாகும்.

விபத்து காப்பீடு திட்டத்தில் பாலிசி எடுத்தவர் விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனமடைந்தாலோ இழப்பீடு தொகை கிடைக்கும். ஆனால், மருத்துவ காப்பீட்டில் விபத்து ஏற்பட்டால் அந்த காயத்திற்கான சிகிச்சைக்கு மட்டுமே பணம் கிடைக்கும், இழப்பீடு எதுவும் கிடைக்காது. எனவே,   விபத்து காப்பீடு மிக முக்கியமானது.

அதேபோல் விபத்து காப்பீடு மட்டும் எடுத்தால் விபத்தில் ஏற்படும் காயத்திற்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும். ஆனால் உடலில் வேறு ஏதாவது நோய் வந்து, அதற்காக செலவு செய்ய வேண்டியிருந்தால், அந்த பணம் விபத்து காப்பீட்டில் கிடைக்காது. எனவே, மருத்துவ காப்பீடும் மிக மிக முக்கியம்.

ஒருவர் தான் வாழ்நாளில் சேர்த்த பணத்தை மொத்தமாக ஒரு சில நாட்களில் இழந்து விடுகிறார் என்றால், அது மருத்துவ செலவினால் மட்டும்தான் என்பதை புரிந்து கொண்டு மருத்துவ காப்பீட்டை கண்டிப்பாக குடும்பத்தினருக்கு எடுக்க வேண்டும். அதேபோல், குடும்பத்தில் வருமானம் உள்ள நபர் கண்டிப்பாக விபத்து காப்பீட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.