லாரி ஓட்டுனர்களுக்கு ஏசி கட்டாயம்.. மத்திய அரசின் அதிரடி உத்தரவு..!

By Bala Siva

Published:

லாரி ஓட்டுநர்கள் கேபின்களில் கட்டாயம் ஏசி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என மதிய அமைச்சர் உத்தரவிட்ட நிலையில் இனி உற்பத்தியாகும் லாரிகளில் ஏசி கேபின்கள் பொருத்தப்பட்டு உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சாலை போக்குவரத்து துறைக்கு அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் இன்றைய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது லாரி கேபின்களில் உள்ள ஓட்டுநர்கள் 43 முதல் 47 டிகிரி வெப்ப சூழ்நிலையில் பணி செய்து வருகின்றனர். எனவே அவர்களின் நலன் கருதி லாரி கேபின்களில் இனி ஏசி பொருத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டு உள்ளேன் என்று தெரிவித்தார்

லாரி டிரைவர்கள் குறித்து நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என்றும் இதனால் லாரி விலை உயரும் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்டாய ஏசி கேபின் என்பதற்கான வகுப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக 12 முதல் 16 மணி நேரம் வரை அவர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் மிகவும் வெப்பமான சூழ்நிலையில் அவர்கள் வேலை செய்வதால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த வசதி இருக்க வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு லாரி ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தாலும் லாரி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.