தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக வலம் வருபவர் விஜய். சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த போதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார். அதற்கு அடுத்ததாக தனது கட்சியின் பெயரையும் கட்சியின் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.
தற்போது நடிகர் விஜயின் முதல் அரசியல் மாபெரும் மாநாடு இன்று அக்டோபர் 27ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாகவும் மிகவும் பிரம்மாண்டமாகவும் நடந்து வந்தது. நடிகர் விஜய் அவர்களின் கட்டவுட் உடன் இணைத்து இந்தியாவில் பெருந்தலைவர்கள் ஆன காமராஜர் பெரியார் அம்பேத்கார் வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் வரை அனைவரும் அதில் இடம்பெற்று இருக்கின்றனர்.
வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட் அவுட்டுகளை பார்த்தவுடன் பெண்களுக்கு இவர் எந்த அளவுக்கு முக்கிய தரம் தரப் போகிறார் என்பது இதிலே நமக்கு புரிகிறது. இதற்கு அடுத்தபடியாக இந்த மாநாட்டில் பல சிறப்பம்சங்கள் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் த வெ க கட்சி கொடியை எந்தவிருக்கும் கொடிக்கம்பம் பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
101 அடி கொடி கம்பத்தில் 20 அடி உயரம் 30 அடி அகலத்தில் த வெ க கட்சிக்கொடி ஏற்றப்பட இருக்கிறது. இந்த கட்சி கொடியை நடிகர் விஜய் ரிமோட் மூலம் ஏற்ற இருக்கிறார். இந்த கொடிக்கம்பத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த கொடி கம்பத்தின் மேலே இடிதாங்கி பொருத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் கொடிக்கம்பத்தின் கீழே 6 அடியில் கல்வெட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 25 வருடங்களுக்கு கொடி கம்பம் துருப்பிடிக்காத அளவுக்கு வேதியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது. குறிப்பாக அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அந்த கொடி கம்பம் அங்கே இருக்கும் படி நில உரிமையாளிடம் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஒரு கொடி கம்பத்திற்கு இத்தனை மெனக்கெட்டு நடிகர் விஜய் இத்தனை விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருப்பது ஆச்சர்யமடைய வைக்கிறது.