ஒவ்வொரு வருடமும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே எல்லாருக்கும் ஸ்பெஷல் தான். முக்கியமாக தீபாவளி வந்துவிட்டால் புத்தாடைகள் பட்டாசுகள் இனிப்புகள் என இந்த பண்டிகையை கொண்டாடுவர். தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சிறுவர் சிறுமியர்கள் பட்டாசு வெடிப்பதை பார்க்கலாம்.
நம் அம்மா பாட்டி காலத்தில் வீட்டிலேயே தீபாவளியை முன்னிட்டு பலவிதமான முறுக்கு அதிரசம் போன்ற பலகார வகைகளை செய்வார்கள். ஆனால் தற்போதைய சூழலில் பலருக்கு பலகாரம் செய்ய தெரிவதில்லை. அதனால் அனைவரும் தங்கள் விருப்பப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை ரெடிமேட்டாக கடையில் வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அப்படி தீபாவளி பண்டிகை வந்துவிட்டால் ஒவ்வொரு கடைகளிலும் ஸ்வீட்டுக்களுக்கான புதுவித ஆஃபர்களையும் காம்போ பேக்குகளையும் அறிமுகப்படுத்துவார்கள்.
அதுபோல வருகிற தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் ஸ்வீட் காம்போ பாக்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பண்டிகை காலத்தில் பல சலுகைகளுடன் வழங்குகிறது ஆவின் நிர்வாகம். அந்த ஸ்வீட் காம்போ பாக்ஸுகளில் மைசூர்பாக்கு 250 கிராம், மிக்ஸர் 200 கிராம், ஆவின் குக்கீஸ் 80 கிராம், பத்து ரூபாய் சாக்லேட் அடங்கிய காம்போ ரூபாய் 300-க்கு விற்கப்படுகிறது.
நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 250 கிராம், மிக்ஸர் 200 கிராம், பத்து ரூபாய் சாக்லேட் ஆகியவை அடங்கிய காம்போ ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. காஜூ பிஸ்தா ரோல் 250 கிராம், காஜூ கட்லி 250 கிராம், நெய் பாதுஷா 250 கிராம், முந்திரி அல்வா 250 கிராம் ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ ரூபாய் 900திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆவியின் ஸ்வீட்டு காம்போ பாக்ஸ்களை தற்போது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.