நாடோடிகள் பட பாணியில் நடந்த நிஜ சம்பவம்.. அரசு வேலை இல்லாததால் திருமணத்தினை நிறுத்திய மணமகள்

By John A

Published:

ஒவ்வொரு இளைஞனுக்கும் கனவு வேலையாக அரசுப் பணி என்பது உள்ளது. அரசுப்பணியில் சேர்ந்து விட்டால் வாழ்க்கை முழுக்க நிம்மதியாகக் கழிக்கலாம். மேலும் நிறைந்த வருமானம், சலுகைகள் என அனைத்தும் கிடைப்பதால் அரசுப்பணிக்கு தயாராகிக் கொண்டிருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில் மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கினாலும் அதிக பணிச்சுமை, இலக்கு, மேலதிகாரியின் குடைச்சல், பணிப் பாதுகாப்பின்மை என அனைத்து இடையூறுகளும் இருக்கிறது.

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் திரைப்படத்தில் சசிக்குமார் அரசு வேலைக்கு தயாராகும் இளைஞராக நடித்திருப்பார். அவரின் மாமா அரசு வேலைக்குச் சென்றால்தான் பெண் தருவேன் என்று அவரிடம் கறாராகக் கூறுவார். ஒருகட்டத்தில் அரசு வேலை கிடைக்காமலேயே போக, அனன்யா வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வார். இப்படி அரசுப் பணி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில் மணமகன் வீட்டார் மாப்பிள்ளை அரசுப்பணியாளர் என்று கூறி திருமணத்தினை நடத்தும் நேரத்தில் மணமகளுக்கு அது உண்மையல்ல என்று தெரியவர திருமண வீடே களேபரமாகியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மாப்பிள்ளை தனியார் நிறுவனத்தில் மாதம் 1.2 இலட்சம் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

எனக்குத் தந்தை போன்றவர் ஏ.ஆர்.ரகுமான்.. மோகனி டே உருக்கமான பதிவு..!

இந்நிலையல் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகள் வீட்டாரிடம் மாப்பிள்ளை அரசு வேலையில் இருப்பதாகக் கூறி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் திருமண நாளில் மாப்பிள்ளை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்ற செய்தி அறிந்த மணமகள் திருமணத்தினை நிறுத்தியிருக்கிறார்.

மாதம் 1.2 இலட்சம் சம்பளம் வாங்கினாலும் தனக்கு வரப்போகும் கணவர் தனியார் வேலை கூடாது எனவும் அரசுப் பணியாளர்தான் வேண்டும் என விடாப்பிடியாக இருக்க திருமணம் நின்று போனது. பேச்சுவார்த்தைக்குப் பின் இருதரப்பினரும் திருமணத்திற்காகச் செய்த செலவுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.