நாம் பல பழைய படங்களில் மண்ணை தோண்டும்போது புதையல் எடுப்பதை பார்த்திருப்போம். புதையல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் நமக்கு இது போல் ஏதாவது ஒரு புதையல் கிடைத்தால் நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமே செட்டில் ஆகிவிடுமே என்று பலர் நினைப்பதுண்டு.
புதையல் என்றாலே அதற்குள் தங்க காசுகள் தங்க கட்டிகள் வைர நகைகள் போன்றவைகள் தான் படத்தில் காட்டப்பட்டிருக்கின்றன. அது போன்ற புதையல்கள் எல்லாம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக மன்னர் காலத்து பொருட்கள், கோவில் சிலைகள், கோவில் சார்ந்த பொக்கிஷங்கள் ஆகியவை கிடைக்கிறது. சில இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது இதுபோல கிடைக்கிறது.
பல இடங்களில் சுவாமி சிலைகள் பூமியை தோண்டும் போது கிடைப்பதற்கு காரணமாக கூறப்படுவது நவாபுகள் ஆட்சி காலத்தில் இந்து கோவில்களை அழிப்பதற்கு போர் தொடுத்த போது அவர்களிடம் நமது பொக்கிஷத்தை பாதுகாக்கவும் தப்பிக்கவும் கோவிலை பாதுகாத்தவர்கள் இதுபோன்று மண்ணிற்கு அடியே கோவில் சிலைகளையும் பொக்கிஷங்களையும் புதைத்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். அதுதான் தற்போதைய காலகட்டத்தில் நமக்கு கிடைக்கிறது.
அதுபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்திருக்கும் கோயில் தான் பெரிய அம்மன் கோவில். இந்த கோவிலை ஒட்டி மரக்கன்று நடுவதற்காக குழியை தோண்டிய போது அந்த அங்கிருந்து இரண்டு அடி திரிசூலமும் உலோகத்தால் ஆன அம்மன் சிலையும் கிடைத்து இருக்கிறது. இதை பார்த்த ஊர் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். தற்போது அந்த திரிசூலத்தையும் அம்மன் சிலையை வைத்தும் பூஜை செய்து வருகிறார்கள்.