2024-25 நிதியாண்டுக்கான ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், வரி குறைப்பை நாடும் தனிநபர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
ஶ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரம் அறக்கட்டளை மூலம் நன்கொடை அளிக்க விரும்புவோர், வரி விலக்கு பெறும் வகையில் பிரிவு 80G உட்பட வேண்டிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மத்திய நேரடி வரி வாரியம் இந்த அறக்கட்டளையை பிரிவு 80G வரி குறைப்புக்கு தகுதியானதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பழைய வரி திட்டத்தை தேர்வு செய்தால், நன்கொடையின் 50% வரையிலான தொகையை சலுகையாக பெறலாம்.
ஆனால் எல்லா நன்கொடைகளும் தானாகவே தகுதி பெறுமா? என்றால் கண்டிப்பாக இல்லை. வரி சலுகை பெறுவது மூன்று முக்கிய காரணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது: பிரிவு 80G தகுதியின்படி கோவில் புதுப்பிப்பு அல்லது பழுதுபார்ப்புக்கான நன்கொடைகள் மட்டுமே வரிச்சலுகை பெற தகுதியானவை. கணக்கில் எடுத்துக் கொள்ளும் வரி சலுகை என்பது மொத்த சரிசெய்யப்பட்ட வருமானத்தின் 10% வரை மட்டுமே அனுமதிக்கப்படும். முடிந்த வரை ஆன்லைன் அல்லது காசோலை மூலமாக வழங்க வேண்டும். ரூ.2,000க்கு மேல் தொகைக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வரி சலுகை கிடையாது.
இதுகுறித்து வரி ஆலோசகர் ஒருவர் கூறும்போது, “ஶ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரம் அறக்கட்டளை மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 80G பிரிவின் கீழ் 50% வரையிலான வரிச்சலுகை கிடைக்கும். ஆனால், இந்த நன்கொடை கோவில் புதுப்பிப்பு அல்லது பழுது பார்ப்புக்காக வழங்கப்பட்டிருக்க வேண்டும். மத சம்பந்தமான விழாக்கள் அல்லது சமூக நிகழ்வுகளுக்கான நன்கொடைகள் தகுதி பெறாது. மேலும், மொத்த சரிசெய்யப்பட்ட வருமானத்தின் (GTI) 10% வரை மட்டுமே குறைப்பு பெற முடியும்.
உதாரணம்:
திரு. A-வின் மொத்த வருமானம் ரூ. 8,00,000
80C பிரிவின் கீழ் குறைப்பு – ரூ. 1,50,000
80E (கல்விக்கடன்) குறைப்பு – ரூ. 3,00,000
சரிசெய்யப்பட்ட மொத்த வருமானம் – ரூ. 3,50,000
குறைக்கப்படக்கூடிய உச்ச வரம்பு (10%) – ரூ. 35,000
நன்கொடை ரூ. 40,000 என்றால், 50% குறைப்பு ரூ. 20,000 (நன்கொடை தொகையின் பாதி), இது 10% வரம்பிற்குள் உள்ளது.
நன்கொடை – ரூ. 80,000 என்றால், 50% குறைப்பு ரூ. 40,000 ஆகும். ஆனால், 10% வரம்பு ரூ. 35,000 என்பதால், அவ்வளவிற்கு குறைப்பு கிடைக்கும்.
எப்படி நன்கொடை வழங்கி வரி குறைப்பு பெறலாம்?
ரூ. 2,000க்கு மேல் ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி குறைப்பு கிடையாது.
ஆன்லைன் மற்றும் காசோலை மூலம் நன்கொடைகளுக்கு எந்த உயர்வான வரம்பும் இல்லை.
ஏனைய 80G அறக்கட்டளைகளுக்கு தேவைப்படும் Form 10BE அல்லது ARN எண் இதற்கு தேவையில்லை.
அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்குவது சட்டப்பூர்வமான வரிச்சலுகை வழியாகும். ஆனால், 50% குறைப்பு மற்றும் 10% GTI வரம்பு போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அதிகப் பலனைப் பெற, ஆன்லைன் முறையை தேர்வு செய்ய வேண்டும், மேலும் வருமான வரி கணக்கீட்டுக்கு தேவையான ரசீதுகளை வைத்திருக்க வேண்டும்.