பிரசவத்திற்காக விமானத்தில் அந்தமான் செல்லும் அரிய வகை நண்டு… எதற்காக தெரியுமா?

By Meena

Published:

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு மீன்கள் நண்டு இறால் போன்றவைகள் தான். சூடான ரசம் சாதத்துடன் ஒரு துண்டு பொரித்த மீனை வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். தற்போது விதவிதமாக வகை வகையாக மீன்கள் நாம் உண்டு மகி கிடைக்கிறது. ஆனால் இந்த மீன்கள் எங்கிருந்து நமக்கு கிடைக்கிறது.

மீனவர்கள் தான் கடலிலே சென்று உயிரை பணயம் வைத்து மீன்களை பிடித்து வருகிறார்கள். அப்படி அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது ஒரு சில அரிய உயிரினங்கள் அவர்கள் வலையில் சிக்கும். அதில் ஒரு சிலவற்றை கடலிலே விட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.

முக்கியமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரினங்கள் முட்டையோடு அதுபோல இருந்தால் கடலில் அதை திரும்ப விட்டு விடுவார்கள். அது போல தான் ஒரு சம்பவம் நாகப்பட்டினத்தில் நடந்திருக்கிறது. அதைப்பற்றி இனி விரிவாக காண்போம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது ஒரு மிகப்பெரிய நண்டு அவர்கள் வலையில் மாட்டியிருக்கிறது. இந்த நண்டின் எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருந்திருக்கிறது. மேலும் அந்த நண்டின் வயிற்றில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருந்திருக்கிறது. உடனே இதை பார்த்த மீனவர்கள் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை வந்து பார்த்த மீன்வளத்துறை அதிகாரிகள் வென்டிலேட்டர் உதவியுடன் தண்ணீரில் போட்டு இந்த நண்டை அந்தமானில் இருக்கும் மீன் குஞ்சு பொரிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். அங்கு பத்திரமாக இந்த 8 லட்சம் முட்டைகளை நண்டு பொறித்த பிறகு அதை பத்திரமாக கடலில் அந்த அதிகாரிகள் விட்டு விடுவார்கள். இந்த அரிய வகை மிகப்பெரிய நண்டு முட்டையுடன் இருப்பதை அங்கிருந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.