நடிகை சௌந்தர்யா இறப்பு விபத்து அல்ல கொலை… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…

சௌந்தர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தர்யா. மிகவும் அழகான வசீகரிக்கும் முகத்தைக் கொண்டவர் சௌந்தர்யா. 1990கள் மற்றும் 2000 களின் ஆரம்ப கட்டத்தில் புகழின்…

soundarya

சௌந்தர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தர்யா. மிகவும் அழகான வசீகரிக்கும் முகத்தைக் கொண்டவர் சௌந்தர்யா.

1990கள் மற்றும் 2000 களின் ஆரம்ப கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சௌந்தர்யா. இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சௌந்தர்யா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

தமிழில் அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, பொன்னுமணி, தவசி, சொக்கத்தங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தார் சௌந்தர்யா. விஜயகாந்த் உடன் இணைந்து இவர் நடித்த சொக்கத்தங்கம் திரைப்படம் தான் அவர் தமிழில் இறுதியாக நடித்த திரைப்படம் ஆகும. இவர் சினிமாவில் பெரிய இடத்துக்கு சென்று விடுவார் என்று நினைத்த வேளையில் 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார் சௌந்தர்யா.

தற்போது நடிகை சௌந்தர்யாவின் இறப்பு விபத்தல்ல அது திட்டமிட்ட கொலை என்று தெலுங்கானாவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்திருக்கிறார். தெலுங்கு நடிகர் மோகன் பாபு சௌந்தர்யாவின் இடத்தை கேட்டார். சௌந்தர்யா கொடுக்கவில்லை. அதனால் அவரை திட்டமிட்டு கொலை செய்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார் என்று அவர் அளித்த புகார் தற்போது சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது.