சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வசதி அளிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் வரிசையில் நிற்காமல், எளிதாகவும் விரைவாகவும் பயணிக்க முடியும்.
இந்த மொபைல் செயலியில் உள்ள ‘Stored Value Pass’ மூலம், பயணிகள் தாங்கள் எங்கிருந்தாலும் எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டவுடன் QR கோட் உருவாக்கப்பட்டு, அது உங்கள் போனின் கேலரியில் சேமிக்கப்படும். இணைய இணைப்பு இல்லாமலும், இந்த QR கோடைப் பயன்படுத்தி மெட்ரோ நிலையங்களுக்குள் நுழையவும் வெளியேறவும் முடியும்.
டிக்கெட் கவுண்டருக்கு சென்று வரிசையில் நிற்கவோ, கார்டை பயன்படுத்தவோ தேவையில்லை. உங்கள் போன் மூலமாகவே எளிதாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பயணம் செய்யும்போது, ‘Stored Value Pass’ பயன்படுத்தி அனைவருக்கான டிக்கெட்டுகளையும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்யலாம்.
இந்த பாஸைப் பயன்படுத்துவதன் மூலம் மெட்ரோ பயண கட்டணத்தில் 20% தள்ளுபடி பெறலாம். மேலும், பார்க்கிங்கிலும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
