இந்தியாவில் மிக பிரபலமான சுற்றுலா தலங்களும் அனைவரும் விரும்பி செல்லக்கூடிய இடம் தான் நீலகிரி. இந்த நீலகிரி மாவட்டம் பல மலை தொடர்களைக் கொண்டது. இதில் அமைந்திருக்கும் முக்கியமான இடங்கள் தான் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகியவையே ஆகும். அதில் ஊட்டி அழகானதாகவும் இயற்கை காட்சிகளையும் கொண்டது.
ஆண்டு முழுவதும் குளுமையை கொண்டிருப்பது தான் இந்த ஊட்டி. ரோஜா தோட்டம், பொட்டானிக்கல் கார்டன் தேயிலை தோட்டம் என ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான பல இடங்கள் இருக்கின்றது. இந்த ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதையே மிகவும் அழகாக ரம்யமாக இருக்கும்.
நீலகிரியில் பலவகையான பூக்கள் தாவர வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் குறிஞ்சி பூ. 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் இந்த அரிய வகை பூ தான் குறிஞ்சி பூ. இதை நினைத்து போது எல்லாம் பார்க்க முடியாது. காத்திருந்துதான் பார்க்க வேண்டும் அப்படி சிறப்பு வாய்ந்தது இந்த குறிஞ்சிப் பூ.
இந்த குறிஞ்சி பூவில் பல வகைகள் இருக்கிறது. மினியேச்சர் குறிஞ்சி ஒரே நேரத்தில் பூக்கக்கூடிய புதர் குறிஞ்சி ஆகியவை இருக்கிறது. இதில் ஒரே நேரத்தில் பூக்கக்கூடிய புதர் குறிஞ்சி நீலகிரி மலையில் அமைந்திருக்கிறது. தற்போது இந்த புதர்குறிஞ்சி நீலகிரி மலை முழுவதும் பூத்துக் குலுங்குகிறது.
இதனால் நீலகிரி மலையே நீல வண்ண போர்வையை போத்தியது போல் நீல நிறமாக காட்சியளிக்கிறது. இந்த பூ பூப்பதால் தான் இந்த மலைக்கு நீலகிரி மலை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த அதிசயமான காட்சியை சுற்றுலா பயணிகளும் மக்களும் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.