செந்தில் பாலாஜி குறித்து பாட்டு பாடிய அடுத்த நிமிடம் கரண்ட் கட் ஆனது ஏன்? பாதிக்கப்பட்ட குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் 8 கிமீ தள்ளி உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? குழந்தையை தூக்கி சென்றவர் யார்? விடை தெரியாத கேள்விகள்..!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நடந்த சோகமான கூட்ட நெரிசல் சம்பவம், பல கேள்விகளையும், அரசியல் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த கூட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததா என்ற சந்தேகம், அரசியல் பார்வையாளர்கள்…

vijay namakkal

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நடந்த சோகமான கூட்ட நெரிசல் சம்பவம், பல கேள்விகளையும், அரசியல் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த கூட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததா என்ற சந்தேகம், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வலுவாக எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு கோணங்களை ராவுத்தர் இப்ராஹிம் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே, திருச்சியில் இருந்த தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்டவர்களை கரூர் மருத்துவமனைக்கு சென்று பார்க்க அனுமதி கோரினார். ஆனால், காவல்துறை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களை கூறி அவருக்கு அனுமதி மறுத்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் ஓடி ஒளிந்து கொண்டார் என்று சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஒரு பெரிய விபத்து நடந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க விரும்பும் ஒரு அரசியல் தலைவருக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. மேலும், இந்த முக்கிய தகவல் ஊடகங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை. முழுவதுமாக மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் தனது உரையில் செந்தில் பாலாஜி குறித்து பேச ஆரம்பித்த சில வினாடிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக-வினர் இது திட்டமிட்ட செயல் என்று குற்றம் சாட்டினர். ஆனால், மின்சார வாரியம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அவர்கள், “விஜய் பேசும்போது எந்த மின் தடையும் ஏற்படவில்லை. நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஜெனரேட்டர்கள் மட்டுமே கூட்ட நெரிசலால் அணைந்துவிட்டன. தெருவிளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன” என்று கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்ததாகத் தவெக வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்துள்ளார். இது கூட்ட நெரிசல் நடக்கும் என்பது முன்கூட்டியே தெரியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பெரிய விபத்து நடக்கும்போது, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பது பொதுவான நடைமுறை என்றாலும், அதன் எண்ணிக்கை மற்றும் உடனடி வருகை குறித்து பல கேள்விகள் எழுகின்றன.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய ஒரு குழந்தையின் தாய், தன் குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், 7-8 கி.மீ. தூரத்தில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், குழந்தையை தூக்கி சென்றவர்களில் சிலர் திமுகவினர் என்றும் குற்றம் சாட்டினார். இது, சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

மேலும், இறந்தவர்களின் உடல்களை அவசரமாக இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இதுபோன்ற பெரிய சம்பவங்களில் பிரேத பரிசோதனை அடுத்த நாள் பகலில் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அவசரமாக செய்யப்பட்டது ஏன்? இது, உயிரிழப்புக்கான உண்மையான காரணங்களை மறைக்கும் முயற்சியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல, அதற்கு பின்னால் பல சூட்சுமங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசின் நடவடிக்கைகள், ஊடகங்களின் அணுகுமுறை, மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், இந்தச் சம்பவத்தில் பல மர்மங்கள் புதைந்திருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு இப்ராஹிம் ராவுத்தர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.