பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும், அவருக்கு வருடத்திற்கு ₹1.03 கோடி சம்பளம் எனவும் வெளியாகிய தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் லவ்லி ப்ரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பி.டெக் மாணவர் நாகவம்ச ரெட்டிக்கு வேலை கிடைத்துள்ளது. அவருக்கு ஆண்டுக்கு அமெரிக்க டாலரில் $1,18,000 (இந்திய மதிப்பில் ₹1.03 கோடி) சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போது அவர் இறுதி ஆண்டு படித்து வருவதால், படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வேலை வழங்கிய நிறுவனம் ஒரு ரோபாட்டிக் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனம் ஆகும். மேலும், அவர் ஏ.ஐ. ரோபோட்கள் உருவாக்கும் நிறுவனத்தில் ரோபாட்டிக் இன்ஜினியராக பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்கும் போதே ₹1 கோடிக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதால், அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இதே பல்கலைக்கழகத்தில் படித்த 1,700 மாணவர்களுக்கு ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.