இனி சிகிச்சைக்கு வெளிநாடு போகத் தேவையில்லை.. வந்தாச்சு புது டெக்னாலஜி.. அசத்தும் சீனா..

முன்பெல்லாம் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60-65 என்ற அளவிலேயே இருந்தது. மருத்துவத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி காரணமாக இன்று மனிதரிகளின் சராசரி ஆயுட்காலம் 70-ஐ கடந்து விட்டது.ஒருகாலத்தில் சிறிய வியாதி வந்தாலே அதற்குரிய முறையான…

5G Treatment

முன்பெல்லாம் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60-65 என்ற அளவிலேயே இருந்தது. மருத்துவத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி காரணமாக இன்று மனிதரிகளின் சராசரி ஆயுட்காலம் 70-ஐ கடந்து விட்டது.ஒருகாலத்தில் சிறிய வியாதி வந்தாலே அதற்குரிய முறையான சிகிச்சை வசதிகள் கண்டறியப்படாமல் மக்கள் உயிரிழந்தனர். இன்று இதய மாற்று அறுவை சிகிச்சையே செய்யும் அளவிற்கு மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் நோய்களை விரட்டியடிக்கிறது.

ஆனால் எந்த அளவிற்கு மருத்துவம் முன்னேறி விட்டதோ அதற்கேற்றாற் போல் கொரோனா போன்ற புதிது புதிதாக பல்வேறு வியாதிகளும் முளைத்துக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் பெரிய பெரிய சிகிச்சைகளுக்கு வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெறுவர். இதனால் பயணக் கட்டணம், சிகிச்சைக் கட்டணம் என பல லட்சங்கள் செலவாகும். இன்று இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ சிசிக்சை முறைகள் வந்து விட்டதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இனி சிகிச்சைக்காக நாடுவிட்டு நாடு போகத் தேவையில்லை. இதற்கும் விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஓர் அற்புத வழியைக் கண்டுபிடித்து விட்டனர். இனி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்தந்த இடத்தில் உள்ள மருத்துவர்களின் மேற்பார்வையுடன் வெளிநாட்டு மருத்துவமனையில் எளிதாக அறுவை சிகிச்சை செய்யலாம்.

இனி 24 மணி நேரம் அல்ல..25 மணி நேரம்.. ஆனா இப்போ அல்ல எப்போதிருந்து தெரியுமா?

சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் உள்ள ஷாங்காய் செஸ்ட் மருத்துவமனையைச் சார்ந்த கிங்யுவான் என்ற டாக்டர் 5000 கி.மீ. தொலைவில் உள்ள நோயாளியின் நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? மனிதன் மூளை அசுர வளர்ச்சி அடைந்து இன்று 5ஜி தொழில்நுட்பம் வரை வளர்ந்துள்ளது. இந்த 5ஜி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அந்த மருத்துவர் நவீன கருவி மூலமாக தொலை தூரத்தில் உள்ள நோயாளியின் உடலில் இருந்த கட்டியை அகற்றியுள்ளார்.

இந்த மகத்தான சாதனை மூலம் இனி நோயாளிகள் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், பெரிய நகரங்களுக்கும் செல்வதற்குப் பதிலாக உள்ளுரிலேயே உயர்தர சிகிச்சையைப் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.