வானில் தினந்தோறும் எண்ணற்ற பல அதிசயங்கள் கண்களுக்குப் புலப்படாமல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் சில பூமியின் மேற்பரப்பில் நிகழும் போது அது கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அந்த வகையில் வால் நட்சத்திரங்கள், எரிகற்கள், விண்கல், கோள்கள், விண்மீண்கள் போன்றவை பூமியை நெருங்கிச் செல்லும்போது அது குறிப்பிடத்தக்க சில விளைவுகளை ஏற்படுத்திச் செல்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாகக் கூட பூமியை 2024RW1 என்ற விண்கல்லானது பிலிப்பைன்ஸ் நாட்டுப் பகுதியில் மோதியது. அளவில் சிறியதாக இருந்ததால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. எனினும் சில வினாடிகள் அந்த நாட்டையே பகலாக்கிச் சென்றிருக்கிறது. தற்போது பூமியை நோக்கி அடுத்த விண்கல் ஒன்று மோதத் தயாராக உள்ளது.
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்.. அரபிக்கடல் அடியில் 21 கிமீ தூரத்திற்கு சுரங்கம்..!
விண்வெளியிலிருந்து மணிக்கு சுமார் 40,000 கிலோமீட்டர் வேகத்தில் வரும் இந்த விண்கல் வருகிற செப்டம்பர் 15 அன்று பூமியை நெருங்கிச் செல்லும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 2024 ON என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லானது சுமார் 720 அடி நீளம் கொண்டதாக இருக்கும் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறுகிறது.
விண்கற்கள் பொதுவாக பூமிக்கு எந்த வித தீங்கையும் ஏற்படுத்தாது என்றாலும் வானில் பறந்து கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் போன்றவற்றின் மீது மோதி அவற்றை செயலிழக்கச் செய்கிறது. மேலும் அதிக விண்கற்கள் கடல் பரப்பில் விழுவதால் மனிதர்களுக்கும் எந்த பாதிப்பினையும் இது ஏற்படுத்துவதில்லை.
எனினும் இவ்வகையான விண்கற்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.