இந்த உலகம் நீண்ட நெடும் தூரம் பரந்து விரிந்து கிடக்கும் அதே வேளையில், நமது கண்ணையும் மனதையும் கவரும் ஏராளமான விஷயங்கள் இங்கே இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி ஆச்சரியமும், அதே வேளையில் மர்மமும் கலந்த விஷயங்களும் இருக்கும் சூழலில், அது தொடர்பாக எதாவது செய்திகள் வெளிவரும் போது நிறைய தகவல்கள் நமக்கும் தெரிய வரும்.
உதாரணத்திற்கு அகழ்வாராய்ச்சி மூலம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன மாதிரியான வாழ்க்கை முறையை பிரதிபலித்து வந்தார்கள், அவர்களது வீடு, அவர்கள் பயன்படுத்திய பொருள் என பல்வேறு விஷயங்களை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இவை நிச்சயம் தற்போதுள்ள மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் அதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் விதைக்கும்.
அப்படி ஒரு சூழலில் தான் தற்போது நடந்துள்ள சம்பவம் தொடர்பான செய்தி மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. UK பகுதியைச் சேர்ந்த எட்டு வயதான புகைப்பட கலைஞர் தான் ஜேமி (Jamie). இவர் தற்போது உலக அளவில் மிக முக்கியமான ஒரு செய்திக்கு பின்னணியாக அமைந்துள்ளார். பொதுவாக வெட்டுக்கிளிகள் என்பது பச்சை நிறத்தில் இருப்பதை தான் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் அதே நேரத்தில், மிக அரிதாக பிங்க் நிறத்திலான வெட்டுக்கிளிகளும் இந்த பூமியில் உள்ளது. இவை மிக மிக குறைவாகவே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், மரபணு மாற்றம் காரணமாக இந்த நிற மாற்றம் அவர்களுக்கு ஏற்படுவதாக தகவல்கள் கூறுகின்றது.
இதனால், இந்த வெட்டுக்கிளிகள் உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த உயிரினத்தை சுமார் உலகின் 1 சதவீத மக்கள் மட்டும் தான் வாழ்நாளில் பார்க்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சிறுமியான ஜேமி புகைப்படங்கள் எடுக்க வெளியே சென்ற போது இந்த அரிய வெட்டுக்கிளியை கவனித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பான வீடியோவையும் வியப்புடன் பதிவிட்டுள்ள ஜேமி, அந்த நிறத்தின் காரணம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 8 வயது சிறுமியான ஜேமி, இப்படி ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டதுடன் பலருக்கும் தெரியாத தகவலையும் அவர் பகிர்ந்துள்ளது அதிகம் பாராட்டுக்களை பெற்று கொடுத்து வருகிறது.
அடுத்த தலைமுறை சிறுவர், சிறுமிகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்றும் பலரும் ஜேமியை முன்னுதாரணமாக வைத்து குறிப்பிட்டு வருகின்றனர்.